தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

3 Apr 2026, 5:05 pm
27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
<p><strong>27 தொகுதிகளுக்கான&nbsp;காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு</strong></p> <p>சென்னை, ஏப்.3- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் &nbsp;திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் &nbsp;ஒதுக்கப்பட்டிருக்க, 27 தொகுதிகளுக் கான வேட்பாளர் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. மதுரை மேலூர் &nbsp;தொகுதிக்கான வேட்பாளர் விரைவில் &nbsp;அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது. வேட்பாளர்களை இறுதி செய்ய &nbsp;கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் &nbsp;நடைபெற்றது. கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, மக்களவைத் தலை வர் ராகுல்காந்தி, செல்வப்பெருந் தகை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தற்போதைய 12 எம்எல்ஏக் களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. குளச்சல் தொகுதியில் விளவங்கோடு எம்எல்ஏ தாரகையும், சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதி நாயுடுவும் வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியல் ஸ்ரீபெரும்புதூர்-செல்வப்பெருந் தகை, சோளிங்கர்-முனிரத்னம், உதகை -ராமச்சந்திரன், விளவங்கோடு-பிர வீன், கிள்ளியூர்-ராஜேஷ்குமார், ஊத்தங்கரை-குப்புசாமி, கவுண்டம் பாளையம்-சூர்யபிரகாஷ், சிங்கா நல்லூர்-ஸ்ரீநிதி நாயுடு, துறையூர்-விச்சு லெனின் பிரசாத், கடலூர்-சந்திர சேகரன், மயிலாடுதுறை-ஜமால் யூனுஷ் முகமது, பொன்னேரி-துரை சந்திரசேகர், ஸ்ரீவைகுண்டம்-ஊர்வசி &nbsp;அமிர்தராஜ், சங்கரன்கோவில்-சங்கை கணேசன், அம்பாசமுத்திரம்-துரை, நாங்குநேரி-ரூபி மனோகரன், குளச்சல்-தாரகை கத்பட், அறந்தாங்கி -டி.ராமச்சந்திரன், ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன், திருவா டானை-ராம.கரு மாணிக்கம், காரைக் குடி-மாங்குடி, சிவகாசி-கணேசன் அசோகன், வேளச்சேரி-ஹசன் மவு லானா, பென்னாகரம்-தமிழ்க்குமரன், கிருஷ்ணகிரி-செல்லக்குமார், ஆத்தூர்- &nbsp;அர்த்தநாரி.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.