பிரதமர் மோடி இல்லம் முன்பு காங்கிரஸ் போராட்டம்
21 Jul 2026, 8:49 pm

பிரதமர் மோடி இல்லம் முன்பு காங்கிரஸ் போராட்டம்

ராகுல், பிரியங்கா காந்தி கைது

புதுதில்லி மாணவர் போராட்டத் தின் மீதான மோடி அரசின் கொடூரத் தாக்குதல் நடவடிக்கை யைக் கண்டித்து, தில்லி லோக் கல்யாண் மார்க் 7இல் உள்ள பிரதமர் மோடி இல் லம் முன்பு காங்கிரஸ் கட்சி யினர் செவ்வாயன்று மாலை போராட்டத்தை தொடங்கி னர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்க ளவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செய லாளர்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், தலைவர் கள், காங்கிரஸ் எம்.பி.,க்கள் பிரதமர் இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பதற்றம டைந்த மோடி அரசு போரா ட்டத்தைக் கைவிடுமாறு கோரி, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந் திர சிங் மற்றும் ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகி யோர் மூலம் பேச்சுவார்த்தை க்கு அழைத்தது.

பேச்சுவார்த்தை தோல்வி

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி., சையத் நசீர் ஹுசைன் உள்ளிட்டோர் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில், ”ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதான் பதவி விலக வேண்டும்; வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன் றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்; தேர்வு முறை கேடுகள் மற்றும் மாணவர் போராட்டங்கள் மீதான கடு மையான அடக்குமுறைக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமை ச்சர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்” என முக் கிய கோரிக்கைகளை காங்கி ரஸ் தலைவர்கள் முன்வைத் தனர். ஆனால் இந்த கோரிக் கைகள் ஏற்கப்படாததால் போராட்டத்தைக் கைவிட ராகுல் காந்தி மறுத்துவிட்டார். சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது. செவ்வாயன்று மாலை 6 மணியளவில் ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலை வர்களை தில்லி காவல் துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது. ராகுல் காந்திக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத் தம் வழிந்ததாக செய்திகள் வெளியாகின.