காங்கிரஸ் கட்சி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்
15 Jun 2026, 9:29 pm

காங்கிரஸ் கட்சி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்

பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வழிநடத் தப்படும் பாஜக தலைமையிலான ஒன்றிய அர சுக்கு எதிராக விரிந்து பரந்த அளவில் மதச்சார் பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகபட்ச முன்னுரிமை வழங்கி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் இடையூறாக இருக்கிற என்பது வெளிப்படையான உண்மை.

பரந்துபட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என்பதை விட காங் கிரஸ் கட்சி அவ்வப்போது வரும் மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் தன்னுடைய குறுகிய அர சியல் நலனை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.

கடந்தாண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல் உட்பட பல்வேறு மாநில தேர்தல்களில் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு காங்கிரஸ் கட்சி உலை வைத்தது என்பது மறுக்க முடியாது.

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் போது, புதுச்சேரியில் இடதுசாரிகளையும் உள்ளடக்கிய ஒரு அணி உருவாவதற்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டதன் மூலம் அந்த மாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ், பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நிலை உருவானது.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி க்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜன நாயக முன்னணிக்கும் இடையில்தான் பிரதான போட்டி இருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்காகாந்தி உள்ளிட்டவர்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், குறிப்பாக முதல்வராக இருந்த தோழர் பினராயி விஜயன் மீதும் தரம் தாழ்ந்த அவதூறுகளை அவிழ்த்துவிட்டனர்.

குறிப்பாக ராகுல்காந்தி, பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அம லாக்கத்துறையை தூண்டிவிட்டார். தற்போது மதச் சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை குறித்து ராகுல் காந்தி பேசும் நிலையில், கேரளத்தில் செய்த அவதூறு குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கி ரஸ் தலைவர் கார்கேவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கடிதம் எழுதினார். இந்தியா அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் வெளிப்படையாகவே இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ராகுல் காந்தி அரசியல் மாறுபாடு காரணமாக பினராயி விஜயனை தம்மால் கட்டித்தழுவ முடியாது என்று பதில ளித்தார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டித்தழுவிய ராகுல், என்னை கட்டித்தழுவ வேண்டிய அவசியம் இல்லை என்று பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். இப்போதைய கேள்வி ராகுல் யாரை ஆரத் தழுவ வேண்டும் என்பது அல்ல, மாறாக மதச்சார்பற்ற கட்சி களின் ஒற்றுமைக்கு இடையூறாக இருக்கும் தன்னுடைய போக்கை காங்கிரஸ் கட்சி மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதுதான்.