தீக்கதிர் முக்கிய செய்திகள்
16 Jul 2026, 9:03 pm

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மசோதாக்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை. அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு விவகாரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மோசடி, எத்தனால் கலந்த எரிபொருள் விவகாரத்தில் நடந்துள்ள ஊழல், வெளியுறவுக் கொள்கை தோல்வி, மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழல் ஆகிய விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா

ஈரானுக்கு எதிரான போரை இஸ்ரேல் தூண்டிவிடுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறுகிறார். அமெரிக்கா அமைதியை விரும்பினால் இஸ்ரேல் மீது பல்வேறு தடைகளை விதித்து தாக்குதல் நடத்தலாமே. இஸ்ரேல் என்ன அமெரிக்காவின் செல்லப் பிள்ளையா?

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே

அனைத்து மாநிலங்களுக்கும் சமமான விகிதத்தில் மக்களவை இடங்கள் 50% அதிகரிக்கப்படுவதை உறுதி செய்தால் மட்டுமே, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பது குறித்து எங்கள் கட்சி பரிசீலிக்கும். தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்யும் போது அரசு கையாளக்கூடிய சூத்திரம் குறித்து எங்களுக்கு கவலைகள் உள்ளன.

தில்லி பத்திரிகையாளர் யூனிட்

ஹோர்முஸ் வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை வேண்டாம் என மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. இது இந்தியர்களின் நலன்களை பாதுகாக்க அல்ல. அமெரிக்கா தாக்குதல் நடத்திய கப்பல்க ளில் இந்தியர்கள் இருந்தால் கண்டனம் தெரிவிக்க முடியாததை, தவிர்க்கவே இந்த அறிவிப்பு.