முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

3 Feb 2026, 3:18 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீல்

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்காவிற்காக இந்திய விவசாயத்துறை உட்பட முழு சந்தையும் திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் என்னென்ன விஷயங்களைப் பற்றி விவாதித்தார் என்பதை நாடாளு மன்றமும், தேசமும் அறிய வேண்டும். அதற்கு உரிமை உண்டு. ஆனால் அதை மறைக்க ஓட்டம் பிடிக்கிறார்கள்.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி

நாடாளுமன்றத்தில் பாஜகவின் உண்மையான எண்ணம் வெளிப்பட்டுவிட்டது.  எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி  சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பேராசிரியர்களாகவோ, துணைவேந்தர்களாகவோ ஆவதற்குத் தகுதியற்றவர்களாக பாஜக கருதுகிறது. இந்தியாவில் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், 38 துணைவேந்தர்கள் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்தரா

விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக, இந்தியா எப்போதும் வெளிநாட்டு விவசாயப் பொருட்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தே வந்துள்ளது. ஆனால் இன்று, அமெரிக்காவிற்கு உதவுவதற்காக மோடி அதே விவசாயிகளை விற்றுவிட்டார்.

பத்திரிகையாளர் ஜெய்கி யாதவ்

மக்களவை விவாதம் நடந்துகொண்டி ருந்தபோது, பாஜக எம்.பி., அனுராக் தாகூர் அணிந்திருந்த பெல்ட் (Belt) கேமராவில் பதிவாகியது. அந்த பெல்ட் “எல்வி (Louis Vuitton - LV)” என்ற சர்வதேச பிராண்டைச் சேர்ந்தது. இதன் விலை சுமார் ரூ.82 ஆயிரம் ஆகும். “சுதேசி” பற்றிப் பேசுபவர்களின் லட்சணம் இது!

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 3,656 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 1,219 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

Share
FacebookXWhatsAppTelegram