முந்தய பக்கம்

தலித் பெண் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு!

6 Oct 2026, 9:36 pm
தலித் பெண் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு!

தலித் பெண் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு!

ஹைதராபாத்காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சிந்தபள்ளி மண்டலத்தில் கிராம அமைப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் கனிப்பள்ளி மாதவி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், 8ஆண்டுகளுக்குமேலாக அப்பதவியில் பணியாற்றி வந்துள்ளார். எனினும், உள்ளூர் பிரச்சனை காரணமாக சுமார் 4 மாதங்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.இந்நிலையில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று (காந்தி ஜெயந்தி) பி.கே.மல்லேப்பள்ளி கிராமத்தில் நடைபெற்றகிராம சபைக் கூட்டத்தில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தனது பணிநீக்க வழக்குத் தொடர்பாகக் கனிப்பள்ளி மாதவி உள்ளூர் மக்களிடம்பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, முன்னாள் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பார்வதியின் கணவரும், காங்கிரஸ் நிர்வாகியுமான கொப்புல அமர்நாத், “மக்களிடம்பேசுவதற்கு உனக்கு என்ன அதிகாரம் உள்ளது?” எனக் கூறி மாதவியின் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், பாலினம் மற்றும் சாதிரீதியாகத் திட்டிஅவரைத் கீழே தள்ளித் தாக்கியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram