முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 Oct 2026, 11:41 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்

எஸ்.ஐ.ஆர் மற்றும் ஞானேஷ் குமார் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அக்டோபர் 2, 5 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பியும் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம். அதற்கு மேல் ‘இந்தியா’ கூட்டணி அடுத்தக் கட்ட முடிவை அறிவிக்கும்.

சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே

மோடி வாக்குத் திருட்டு செய்தே வெற்றி பெற்றார். உயிருடன் இருப்பவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டார் ்கள். மோடியால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மரணம் இது. எஸ்ஐஆர் மூலம் மக்களின் உரிமையை தன்வசப்படுத்த விரும்புகிறார் மோடி. இது ஆர்எஸ்எஸ் மற்றும் கோட்சேவின் சித்தாந்தம். மோடி தனது சர்வாதிகாரத்தை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்

இந்திய நாட்டில் யார் அரசாங்கத்தை அமைப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால், எஸ்.ஐ.ஆர் மூலம் யார் வாக்களிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கிறது. இது ஒரு தூய்மைப்படுத்தும் நடவடிக்கை அல்ல. நீக்கப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மையினர், பழங்குடியினர், முஸ்லிம் வாக்காளர்களாகவே உள்ளனர்.

யூடியுபர் துருவ் ரதி

எஸ்.ஐ.ஆர் யாரும் கண்டறிய முடியாத ஒரு நவீன செயல்பாடு என்று ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான மோடி அரசு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் கர்நாடகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களின் எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளை வெளியிடுவேன்.

Share
FacebookXWhatsAppTelegram