தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணியை சிதறடித்துவிட்டது காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் சாடல்! காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு ஆதரவில்லை என அறிவிப்பு

26 Mar 2026, 2:46 pm
புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணியை சிதறடித்துவிட்டது காங்கிரஸ்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் சாடல்! காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு ஆதரவில்லை என அறிவிப்பு
<p><strong>புதுச்சேரியில் &lsquo;இந்தியா&rsquo; கூட்டணியை சிதறடித்துவிட்டது காங்கிரஸ் &nbsp;இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் சாடல்! காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு ஆதரவில்லை என அறிவிப்பு</strong></p> <p>புதுச்சேரி, மார்ச் 26- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பசியால் &lsquo;இந்தியா&rsquo; கூட்டணி சிதறி விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;குற்றம் சாட்டியுள்ளது. &nbsp;மேலும், இத்தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு ஆதரவில்லை என்றும் சிபிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் &nbsp;செயலாளர் அ.மு.சலீம் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், புதுச்சேரி &nbsp;என்.ஆர். காங்கிரஸ் - பாஜக ஆட்சி யை எதிர்த்தும் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவைத் தோற்கடிக்க &lsquo;இந்தியா&rsquo; கூட்டணியை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றினோம். &nbsp;ஆனால், தற்போது நடைபெற வுள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணியில் சேர்க்காமல், காங்கிரஸின் சூழ்ச்சிக்கு திமுக பலியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைமையுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இறுதிவரை எவ்வித முடிவையும் அறிவிக்காமல் காலந்தாழ்த்தி ஏமாற்றி விட்டனர். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பசியால் வலுவான கூட்டணி உடைக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக, தற்போதைய எம்.பி.யாக இருக்கும் வைத்திலிங்கம், கூட்டணி தர்மத்தை மீறி தட்டாஞ்சாவடி தொகு தியில் போட்டியிடுவது &lsquo;அழுக்கான அரசியல்&rsquo; ஆகும். உழவர்கரையில் போட்டி எனவே, இந்தத் தேர்தலில் உழவர்கரை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்றும், தட்டாஞ்சா வடி தொகுதியில் போட்டியிலிருந்து விலகுவது என்றும் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி யிடும் திருபுவனை, லாஸ்பேட்டை தொகுதிகளையும், விசிக போட்டியிடும் ஊசுடு, நெட்டப்பாக்கம் தொகுதிகளையும், மதிமுக போட்டியிடும் உருளையன்பேட்டை தொகுதியையும் சிபிஐ ஆதரிக்கும். மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். காங்கிர ஸை உறுதியுடன் எதிர்கொள்ளும் தகுதியான சுயேச்சை வேட்பாளர்களுக்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தனது ஆதரவை வழங்கும். &nbsp;கூட்டணியை உடைத்த காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்தச் சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் நாரா. கலைநாதன், இ. தினேஷ் பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.