முந்தய பக்கம்

தீக்கதிர் நாளிதழுக்கு ஆண்டு சந்தா காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழங்கினார்

18 Jul 2026, 11:45 pm
தீக்கதிர் நாளிதழுக்கு ஆண்டு சந்தா  காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழங்கினார்
<p><strong>தீக்கதிர் நாளிதழுக்கு ஆண்டு சந்தா காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழங்கினார்</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 18 - ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்வாகிகள் இடையேயான நட்பு ரீதியிலான சந்திப்பு சனிக்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது. ராணிப்பேட்டையிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கே. நரேஷ் குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘தீக்கதிர்’ பத்திரிகைக்கு ஓராண்டுக்கான சந்தா தொகையினை சிபிஎம் மாவட்ட செய லாளரிடம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.நரேஷ் குமார் வழங்கினார். இந்நிகழ்வின் போது சிபிஎம் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன் மற்றும் தீக்கதிர் நாளிதழின் மாவட்ட செய்தியாளர் ஹரி. கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram