முந்தய பக்கம்

கவுண்டம்பாளையம் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்

5 Apr 2026, 5:18 pm
கவுண்டம்பாளையம் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்
<p><strong>கவுண்டம்பாளையம் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்</strong></p> <p>கோவை, ஏப்.5- கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் &nbsp;போட்டியிடும் காங்கிரஸ் &nbsp;கட்சி வேட்பாளர் சூரிய பிர காஷ் அறிமுக கூட்டம் மற் றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா தொப்பம்பட்டி பிரிவில் நடைபெற்றது. கோவை, கவுண்டம் பாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் &nbsp;வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாள ராக சூரிய பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஞாயிறன்று தேர்தல் பணி களுக்காக தேர்தல் அலுவலகம் திறக்கப் பட்டது. இதனை மதச்சாற்பற்ற முற்போக்கு &nbsp;கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய &nbsp;பிரகாஷ், மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி &nbsp;ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். &nbsp;தொடர்ந்து ஒன்றியச் செயலாளர் கார்த்தி தலைமையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் &nbsp;நடைபெற்றது. தொடர்ந்து சூர்ய பிரகாஷ்க்கு &nbsp;கூட்டணி கட்சி நிர்வாகிகள் பயனாடை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram