காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் சிவகாசியில் தீவிர வாக்கு சேகரிப்பு
9 Apr 2026, 5:30 am

காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் சிவகாசியில் தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகாசி, ஏப்.8- சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜி.அசோகன் போட்டியிடுகிறார்.

சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் செய்யப்பட்ட பணிகளை பட்டியலிட்டார். தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் மக்களிடம் விளக்கினார்.

இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.