முந்தய பக்கம்

பொன்னேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

6 Apr 2026, 5:37 pm
பொன்னேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
<p><strong>பொன்னேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு</strong></p> <p>திருவள்ளூர், ஏப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கலந்து கொண்டு &nbsp;வாக்குகளை சேகரித்தார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் ஞாயிறன்று (ஏப் 5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பொன்னேரி சட்டமன்றத் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் துரை.சந்திரசேகர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய பாடுபடுவேன் என தெரி வித்தார். இணைந்து சென்று வாக்குகளை சேகரிப்போம் என்றார். திங்களன்று (ஏப்.6), வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மீஞ்சூர் ஒன்றிய செய லாளர் என்.ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், சோழவரம் ஒன்றிய செயலாளர் அ.து.கோதண்டன், &nbsp;மாவட்ட குழு உறுப்பி னர்கள் எஸ்.எம்.அனீப், இ.தவமணி, இ.ஜெயவேல், ஜி.வி.எல்லையன் உள்ளிட்ட பலர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram