என்.ஆர்.காங். - பாஜக கூட்டணியை வீழ்த்தும் பரந்த மேடையை அமைக்க காங்கிரஸ், திமுக தவறிவிட்டன!
26 Mar 2026, 2:46 pm
<p><strong>என்.ஆர்.காங். - பாஜக கூட்டணியை வீழ்த்தும் பரந்த மேடையை அமைக்க காங்கிரஸ், திமுக தவறிவிட்டன!</strong></p>
<p>கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு புதுச்சேரி, மார்ச் 26- புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி யை வீழ்த்துவதற்கான பரந்த மேடையை அமைக்க காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் தவறி விட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் வியாழ னன்று (மார்ச் 26) செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது: புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் விரோத பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி யாளர்களை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்தும், மதச் சார்பற்ற முற்போக்கு சக்தி களுடன் இணைந்தும் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தது. இதன்தொடர்ச்சியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஆட்சி யை வீழ்த்த, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யுடன் இணைந்து பணியாற்ற மார்க்சிஸ்ட் கட்சி விரும்பி யது. இதன் அடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கூட்டணி சார்பில் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினிடமும் இது குறித்து கோரிக்கை வைத் தோம். அவரும் புதுச்சேரி மாநிலத் தலைவர்களிடம் பேசி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்குத் தொகுதி ஒதுக்க வழிகாட்டி யிருந்தார். இழுபறி நீடிப்பு ஆனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை களில் சுமுக முடிவு எட்டப் படவில்லை. குறிப்பாக, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. சிபி எம், சிபிஐ மற்றும் விடு தலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறும் காலமும் நிறை வடைந்துள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கட்சி களுக்கு இடையே சில தொகுதிகளில் பரஸ்பரப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. தோழமைக் கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விசிக ஆகி யவற்றிற்கு இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மக்கள் விரோத கூட்டணியை வீழ்த்துவதற்குப் பதில், புதுச்சேரி தலைவர்களின் தனிப்பட்ட பதவி மோகமே இந்த பின்னடைவுக்குக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு சுட்டிக்காட்டுகிறது. 2 தொகுதிகளில் போட்டி இந்தச் சூழலில், புதுச் சேரி மாநிலத்தில் திருபுவ னை மற்றும் லாஸ்பேட்டை ஆகிய இரண்டு தொகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுவது என மாநிலக் குழு தீர்மானித் துள்ளது. இதன்படி, லாஸ் பேட்டை தொகுதியில் கட்சி யின் செயற்குழு உறுப்பினர் இரா. ராஜாங்கமும், திரு புவனை தொகுதியில் மா.தட்சிணாமூர்த்தியும் போட்டியிடுகின்றனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி யிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றுவது என வும், இதர தொகுதிகளில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை முறி யடிக்கப் பணியாற்று வது எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது. புதுச்சேரியில் மக்கள் நலன் காக்கும் மாற்று அரசை உருவாக்க, சிபிஎம் மற்றும் சிபிஐ வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுமாறு புதுச்சேரி மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் கூறினார். இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார், புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். வேட்பாளர் அறிமுகம் புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மாநில செயற்குழு உறுப்பி னர் இரா. ராஜாங்கத்தை, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர் களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.</p>
