தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

18 Jan 2026, 4:50 pm
நீட் தேர்வில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பாராட்டு விழா
<p><strong>நீட் தேர்வில் வெற்றி பெற்ற &nbsp;மாணவர்களுக்கு பாராட்டு விழா</strong></p> <p>கிருஷ்ணகிரி ஜன.18- ஸ்பெக்ட்ரா அகாடமி சார்பில் மருத்து வம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்பு கள் குறித்து மாணவர்களுக்கு ஊக்கு விப்பு பயிற்சியும் வெற்றி பெற்ற மாண வர்களுக்கான பாராட்டு விழாவும் ஓசூரில் &nbsp;நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓசூர் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் சுபானா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியின் செயலாளர் லோகநாதன் கலந்து கொண்டார். &nbsp;ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார் மேலான் இயக்குனர் கார்த்திகேயன் பேசுகையில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்பெக்ட்ராவின் அனைத்து கிளைகளிலும் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்து வத்திற்கான நீட் தேர்வில் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 278 பேர் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த சாதனையை படைத்த,ஓசூர் கிளையில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு &nbsp;விழா &nbsp;நடைபெற்றது. &nbsp;தமிழகத்தின் தலை சிறந்த ஊக்கமூட்டும் பேச்சாளர் மருத்துவர் மதனகோபால் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்,மற்றும் ஊக்குவித்தல் பயிற்சியை வழங்கினார். வரும் கல்வியாண்டில் நீட் தேர்வுக்கு தயாராவதற்கு பயனுள்ளதாகவும், ஊக்க மூட்டுவதாகவும் இருந்தது என தற்போது பொறியியல் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள், பெற்றோர்கள் கூறினர். வரும் கல்வி ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு குறுகியகால பயிற்சி வகுப்புகள் மார்ச் 24 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான செயற்கை நடைபெற்று வருகிறது.இங்கு தங்கி பயில ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனி விடுதி வசதிகளும் உள்ளது. குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயின்ற வர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் மேலும் விவ ரங்களுக்கு 70945 77773 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.