திமுக இளம் வேட்பாளருக்கு வாழ்த்து
2 Apr 2026, 3:50 pm
<p><strong>திமுக இளம் வேட்பாளருக்கு வாழ்த்து</strong></p>
<p>அவிநாசி, ஏப்.2 அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வருகை தந்து வாழ்த்துப் பெற்றார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுகவின் இளம் வேட்பாளர் கோகிலா மணி, புதனன்று அவிநாசி தொகுதிக்குட்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் சென்று வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம். வேலுச்சாமி, தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து, அவிநாசி வாரச்சந்தை வியாபாரிகள் விவசாயிகளிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியைச் சேர்ந்த திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது வியாபாரிகள் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வாரச்சந்தையில் முன்பு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர், வசூலிக்கின்ற கட்டணத்திற்கு உரிய ரசீது கொடுப்பதில்லை, கூடுதல் கட்டணம் வசூலிப்பதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என தெரிவித்தார். இதனை கேட்டுக் கொண்ட கட்சியினர் உரிய முறையில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாஷ், பழனிச்சாமி, நகரச் செயலாளர் திராவிட வசந்த், நகர மன்றத் தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, வேட்பாளர் கோகிலா மணியிடம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர், கலை இலக்கிய சமூக கோரிக்கை சாசனத்தை மனுவாக அளித்தனர்.</p>
