முந்தய பக்கம்

திருக்குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

24 Jan 2026, 3:38 pm
திருக்குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
<p><strong>திருக்குறள் ஒப்பித்தல், ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு</strong></p> <p>புதுக்கோட்டை, ஜன.24- &nbsp;தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு, வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முதல் பரிசாக தலா 5 நபர்களுக்கு ரூ.5000, இரண்டாம் பரிசாக தலா 5 நபர்களுக்கு ரூ.3000, மூன்றாம் பரிசாக தலா 5 நபர்களுக்கு ரூ.2000-மும் என மொத்தம் 15 நபர்களுக்கு ரூ.50,000, திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000-மும் என மொத்தம் 3 நபர்களுக்கு ரூ.10,000 பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள், நூல் பரிசுகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.திருமால், உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சி) ச.சீதாலெட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கே.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram