மேல்நிலைப் பள்ளித் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு வாழ்த்து
26 Feb 2026, 5:09 pm
<p><strong>மேல்நிலைப் பள்ளித் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு வாழ்த்து</strong></p>
<p>சிதம்பரம், பிப். 26- சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசுத் தேர்வு மற்றும் பள்ளித் தேர்வு எழுத 469 மாணவிகள் உள்ளனர். இவர்களைக் காட்டுமன்னார்க்கோவில் ராஜீவ் காந்தி தேசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் கமல் மணிரத்தினம் மற்றும் அவரது மனைவி அரசு மகப்பேறு மருத்துவர் பிரசன்னா பிரியா ஆகியோர் பள்ளிக்குச் சென்று, தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்குக் குடிநீர் பாட்டில், பேனா மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக் கூறினர். அப்போது அவர்கள் மாணவிகள் மத்தியில் பேசுகையில், "வாழ்க்கையில் முன்னேறக் கல்வி ஒன்றே மிகப்பெரிய ஆயுதம். இதனை அனைவரும் கருத்தில் கொண்டு வருகின்ற அரசு மற்றும் பள்ளித் தேர்வுகளை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்" என வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை எழிலரசி, நந்தனார் கல்விக் கழக நிர்வாகிகள் திருவாசகம், பாலையா, ஜெயச்சந்திரன், வினோபா, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தமிழரசன், கஜேந்திரன், ரவி, ஆனந்த், ஆசிரியர் முன்னேற்றச் சங்கத் தலைவர் சாமிதுரை, ராஜீவ் காந்தி மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கமலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p>
