முந்தய பக்கம்

தேசிய டேக்வாண்டோ போட்டி தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

31 Jan 2026, 5:27 pm
தேசிய டேக்வாண்டோ போட்டி தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
<p><strong>தேசிய டேக்வாண்டோ போட்டி தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு</strong></p> <p>கிருஷ்ணகிரி, ஜன.31- &nbsp;மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி தஷண்யா சாதனை படைத்துள்ளார். 55 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மாணவி தஷண்யா, அபாரமாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பள்ளியின் தாளாளர் கூத்தரசன் கலந்துகொண்டு மாணவியைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram