தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
8 Jan 2026, 2:44 pm
<p><strong>தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு</strong></p>
<p>நத்தம், ஜன.8- தில்லியில் தேசிய அளவிலான கோகோ போட்டிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராள மான பள்ளி, கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இதில் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் 19 வயதிக்கு உட் பட்டோருக்கான கோகோ போட்டியில் தங்கம் வென்றனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, உடற்கல்வி இயக்குநர் ராஜ்குமார், விளையாட்டு ஆசிரியர் சோலைமலை உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.</p>
