தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி விதிமுறைகளில் குழப்பம்

3 Feb 2026, 4:00 pm
அரசு சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி விதிமுறைகளில் குழப்பம்
<p><strong>அரசு சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி விதிமுறைகளில் குழப்பம்</strong></p> <p>இராமநாதபுரம், பிப்.3- இராமநாதபுரத்தில் &ldquo;இது நம்ம &nbsp;ஆட்டம்&rdquo; என்ற தலைப்பில் தமிழ் நாடு அரசு சார்பில் மாவட்ட அள வில் நடைபெற்ற ஸ்ட்ரீட் கிரிக்கெட் &nbsp;போட்டியில், ஒன்றிய அளவிலும் &nbsp;மாவட்ட அளவிலும் விதிமுறைகள் &nbsp;வெவ்வேறாக இருந்ததால், போட் &nbsp;டியில் கலந்து கொள்ள வந்த விளை யாட்டு வீரர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில், ஒன்றிய &nbsp;அளவில் &ldquo;இது நம்ம ஆட்டம்&rdquo; என்ற &nbsp;பெயரில் ஒன்பது பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டு, முதல் இடம் பெற்ற வீரர் &nbsp;கள் மற்றும் வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவி லான போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில், வாலி பால், கபடி, கயிறு இழுத்தல் உள் &nbsp;ளிட்ட ஒன்பது விளையாட்டுப் பிரிவு களில், இராமநாதபுரம் மாவட்டத் தின் 11 ஒன்றியங்களில் முதல் பரிசு பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆனால், ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியில், ஒன்றிய அளவில் நடத் &nbsp;தப்பட்ட போட்டிகளின் விதிமுறை கள் ஒரு வகையாகவும், மாவட்ட &nbsp;அளவில் நடத்தப்பட்ட போட்டியின் &nbsp;விதிமுறைகள் முற்றிலும் வேறு பட்டதாகவும் இருந்தது. இது குறித்து முன்கூட்டியே எவ்வித அறி விப்பும் வழங்கப்படாததால், போட்டியில் கலந்து கொள்ள வந்த &nbsp;வீரர்கள் பெரும் குழப்பத்திற்கும் சிரமத்திற்கும் உள்ளாகினர். இதுகுறித்து ஸ்ட்ரீட் கிரிக்கெட் &nbsp;போட்டியில் கலந்து கொண்ட வீரர் மார்க்கண்டயன் கூறுகையில், &ldquo;ஒன்றிய அளவில் நடத்தப்பட்ட &nbsp;ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகள் சாதா ரண மைதானத்தில் நடத்தப்பட்ட நிலையில், மாவட்ட அளவிலான போட்டிகள் செயற்கை ஆடுகளம் கொண்ட மைதானத்தில் நடத்தப் பட்டன. இதனால், விதிமுறைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந் தது. முதுகுளத்தூர், கடலாடி, கமுதி உள்ளிட்ட பல ஒன்றியங்களில் செயற்கை ஆடுகளம் கொண்ட மைதானங்கள் இல்லாததால், அப்பகுதிகளில் இருந்து வந்த &nbsp;வீரர்கள் விளையாட முடியாமல் சிரமப்பட்டனர். புதிய விதிமுறை கள் காரணமாக, வீரர்கள் தங்க ளது திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர். மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணி கள் மாநில அளவிலான போட்டி யில் பங்கேற்க இருப்பதால், இந்த &nbsp;விதிமுறை குழப்பம் திறமையான வீரர்களின் வாய்ப்பை வீணாக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம் பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, &nbsp;ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியை முறையான விதிமுறைகளுடன் மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும்&rdquo; என்றார். மேலும், ஒன்றிய அளவில் இரண்டு அல்லது மூன்று பிரிவு களில் வெற்றி பெற்ற சில வீரர்கள், &nbsp;மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க வழங்கப்பட்ட பேரு ந்து கட்டணத் தொகையில் முறை கேடு நடந்துள்ளதாகவும் குற்றச் &nbsp;சாட்டு எழுந்துள்ளது. பல போட்டி களில் பங்கேற்ற வீரர்களுக்கு, ஒரு &nbsp;போட்டிக்கான பேருந்து கட்டணத் &nbsp;தொகை மட்டுமே வழங்கப்பட்டு, &nbsp;மீதித் தொகை வழங்கப்பட வில்லை என தெரிவித்தனர். கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ் நாடு அரசு சார்பில் நடத்தப்படும் &ldquo;இது நம்ம ஆட்டம்&rdquo; போட்டியில், ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டி மட்டும் செயற்கை ஆடுகளம் கொண்ட மைதானத்தில் நடத்தப்பட்டதால், கிராமப்புறங்களில் இருந்து வந்த &nbsp;வீரர்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டனர். எனவே, ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியை சாதாரண மைதா னத்தில், முன்கூட்டியே அறிவிக்கப் &nbsp;பட்ட ஒரே மாதிரியான விதிமுறை களுடன் மீண்டும் நடத்த வேண்டும் &nbsp;என விளையாட்டு வீரர்கள் மற்றும் &nbsp;பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.