வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் குழப்பம்: அதிகாரிகள் ஆதங்கம்!
20 Nov 2025, 3:46 pm
<p><strong>வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் குழப்பம்: அதிகாரிகள் ஆதங்கம்!</strong></p>
<p>வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தங்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், கூடுதல் பணிச்சுமையாக இருப்பதாகவும் பூத் லெவல் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து கோவை நகரப் பகுதியில் விண்ணப்பங்களை விநி யோகித்துக்கொண்டிருந்த பெயர் சொல்ல விரும்பாத பூத் லெவல் அதிகாரிகள் கூறுகையில், “நாங் கள் தினமும் சிறப்பு தீவிர வாக்கா ளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இறந்தவர்க ளின் விவரங்களை, இறப்புச் சான் றிதழ் கொடுக்கும்போதே வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்திருக்கலாம். அவ்வாறு செய் யாததால், மீண்டும் நாங்களே பகுதி வாரியாக விசாரித்து விவரங் களைச் சமர்ப்பிக்க வேண்டியுள் ளது. மேலும், நாங்கள் விண்ணப் பப் படிவங்களைக் கொடுக்கச் செல்லும்போது, வீடுகளில் யாரும் இருப்பதில்லை. பெரும்பாலா னோர் வேலைக்குச் சென்று விடுகி றார்கள். இதற்காக, தினமும் அதி காலை 7 மணியில் இருந்தே வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங் குகிறோம். சில விவரங்களை எங் களாலேயே கண்டறிந்து சொல்ல முடியவில்லை. சிலர் வேறு இடங்க ளுக்கு வீட்டை மாற்றியுள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ள வும் முடியவில்லை. ஒருவேளை செல்போனில் அழைத்தாலும், ‘பதில் சொல்ல முடியாது’ எனக் கூறிவிடுகின்றனர். தினமும் பள்ளி வேலைகளை யும் பார்க்க வேண்டியுள்ளது. பல் வேறு இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் அவசரகதியில் அலைந்து திரிந்து படிவங்களைக் கொடுத்து வருகிறோம். இது எங்க ளுக்கு ஒரு பணிச்சுமையாகவே உள்ளது. எங்கள் பகுதியில் தற் போது வரை 4 வட மாநிலத் தொழி லாளர்களுக்குப் படிவம் வந்துள் ளது. பொதுமக்களுக்கு உள்ளது போலவே, எங்களுக்கும் இதில் பல குழப்பங்கள் உள்ளன,” என்ற னர். சுந்தராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பூ வியாபாரி, வாக் காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாகத் தாங்கள் படும் சிர மத்தை விவரித்தார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் படி வத்தைக் கொடுத்தார்கள். அதில் கேட்கப்பட்டுள்ள தாய், தந்தை பெயரைச் சொல்லலாம். ஆனால், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை எப்படித் தர முடியும்? கணவர் விவரங்களையும் கேட் டுள்ளனர். அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், அவ ரது வாக்காளர் விவரங்களைப் பெற முடியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கூறினால், ‘ஏற்க னவே வாக்களித்த இடத்தில் கேட்டு, அதை எப்படியாவது வாங்கி வாருங்கள். அப்போதுதான் படி வங்களைப் பூர்த்தி செய்ய முடி யும்’ என்கிறார்கள். இதற்காகவே நான் வேலையை விட்டுவிட்டு, 2 மணி நேரத்திற்கும் மேலாகச் சென்று அலைய வேண் டியுள்ளது. இதனால், ஒரு நாள் வருவாயே முற்றிலுமாகப் போய் விடுகிறது. மேலும், வாக்காளர் பட் டியலில் எனது பெயர் வருமா? என்ற சந்தேகமும் உள்ளது,” என் றார். (நநி)</p>
