தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் குழப்பம்: வாக்காளர்கள், ஊழியர்கள் மத்தியில் நீடிக்கும் பதற்றம்!

16 Nov 2025, 3:30 pm
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில்  குழப்பம்: வாக்காளர்கள், ஊழியர்கள் மத்தியில் நீடிக்கும் பதற்றம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில்  குழப்பம்: வாக்காளர்கள், ஊழியர்கள் மத்தியில் நீடிக்கும் பதற்றம்!

இந்தியத் தேர்தல் ஆணை யத்தின் சிறப்பு தீவிர வாக்கா ளர் பட்டியல் திருத்தப் பணி தமிழ கத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், இத்திட்டத்தில் கேட்கப்படும் விபரங்கள் மற்றும் பணியின் நடை முறைகள் குறித்துப் பொதுமக்கள் மத்தி யில் குழப்பமும் அச்சமும் நீடிக்கின்றன.

பழைய விபரங்கள் கேட்டு பொதுமக்கள் திணறல்

கோவை, குனியமுத்தூர் போன்ற  பகுதிகளில், வாக்காளர்கள் படிவங் களைப் பூர்த்தி செய்வதில் கடும் சிரமங்களைச் சந்திப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

ஆவணங்கள் இல்லாமை: பட்டதாரி யான மணிகண்டன் என்பவர், 2002ஆம் ஆண்டின் வாக்காளர் விபரங்கள் போன்ற 20 வருடங்களுக்கு முந்தைய தகவல்களைக் கேட்பது சாத்திய மில்லை என்கிறார். விவசாயிகளான அவரது பெற்றோர்களுக்கும் அத்தக வல்கள் நினைவில் இல்லை.   பூர்த்தி செய்ய இயலாமை: “பட்டதாரி யான எனக்கே படிவத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. எழுதப் படிக்கத் தெரியாத எளிய மக்கள் எப்படி இதைச் செய்வார்கள்?” எனத் தூய்மை பணியாளரான சத்தியவாணி உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்புகின்றனர். வாக்கு ரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மறைமுக என்ஆர்சி சந்தேகம்: ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் ராமசாமி, படிவத்தில், “வேறு எந்த நாட்டின் குடி யுரிமையும் பெறவில்லை” என்று உறுதிமொழி கேட்பது, எஸ்ஐஆர் பணி யின் உண்மையான நோக்கம் மறை முகமாக தேசிய குடியுரிமைப் பதி வேட்டை (NRC) அமல்படுத்துவதே என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவதாக புகார்  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளைச் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலகத்தின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் கட்டா யப்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள் ளது. பெண் ஊழியர்கள் உட்படப் பணியாளர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு,  தேர்தல் ஆணையம் பொதுமக்க ளுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என்றும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவி செய்யக் கூடுதல் வசதிகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.