வாரத்தில் ஐந்து நாட்கள் வேலையை உறுதிப்படுத்திடுக
27 Jan 2026, 3:28 pm

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலையை உறுதிப்படுத்திடுக

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.27- ஒப்புக்கொள்ளப்பட்ட உறுதி மொழியை மீறும் ஒன்றிய மோடி அர சின் மனிதாபிமானமற்ற உழைப்பு சுரண்டலுக்கு எதிராக செவ்வா யன்று வங்கி ஊழியர்கள் நாடு தழு விய வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத் தில் ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி சேவை முழுமையாக முடங்கி யது. கடந்த 2015-ம் ஆண்டே “ஐந்து நாள் வேலை” என்பது கொள்கை ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டது. “இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை; விரை வில் மற்ற சனிக்கிழமைகளும் விடு முறையாக்கப்படும்” என்ற வாக் குறுதி அளிக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் முடிந்து, 11 ஆவது, 12 ஆவது ஊதிய ஒப்பந்தங்கள் வந்துவிட்டன, ஆனால் ஊழியர்க ளின் இந்த நியாயமான கோரிக்கை மட்டும் கிடப்பில் கிடக்கிறது. 2023-ல் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) பரிந்துரைத்த பிறகும், ஒன்றிய மோடி தலைமையிலான பாஜக அரசு “பங்குதாரர்கள் எதிர்ப்பு” என்ற காரணத்தைக் கூறி வங்கி ஊழியர்களின் உழைப்பை சுரண்டு கிறது. வங்கிகளுக்கு தற்போது மாதத் தின் இரண்டாவது மற்றும் நான்கா வது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வரு கிறது. மேலும், வங்கிகளில் பெண் கள் அதிகளவில் பணியாற்றி வரு கின்றனர். குடும்ப சூழ்நிலை, வங்கி ஊழியர்களின் வேலைப்பளு, ஒன் றிய, மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, ஒன்றிய அரசு வாரத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் போரம் ஆப் வங்கி யூனியன்ஸ்’ வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, பொதுத் துறை வங்கி ஊழியர்கள் செவ்வா யன்று நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வங்கி வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒரு பகுதியாக கோவை ரயில் நிலை யம் எதிரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஏஐபிஇஏ மாவட் டச் செயலாளர் பாஷா தலைமை வகித்தார். கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சயீத் இப்ராஹிம், ஏஐ பிஒசி மாவட்டச் செயலாளர் முரு கேசன், என்சிபிஇ மாவட்டச் செய லாளர் செந்தில் குமார், வங்கி அதி காரிகள் சங்கத்தின் தலைவர் சசித ரன், ஐஎன்பிஓசி சார்பில் தியாக ராஜன் மற்றும் இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஷ் வரன் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, வங்கி ஊழியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தீனத யாளன், அகில இந்திய வங்கி ஊழி யர் சம்மேளன நிர்வாகி எஸ்.சம்பத், அகில இந்திய வங்கி அதிகாரி கள் கூட்டமைப்பின் நிர்வாகி வஜ்ர வேல், தேசிய வங்கி ஊழியர் கூட்ட மைப்பின் நிர்வாகி சதீஷ் உள் ளிட்ட 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஈரோடு எல்ஐசி கிளை எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு, வங்கி ஊழியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் தலைமை வகித்தார். வங்கி நிர்வாகி கள் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று நமக்கல், நீல கிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இப்போராட்டம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக வங்கி ஊழி யர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சேவை கள் பாதிக்கப்பட்டது.