தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது

28 Sept 2026, 10:51 pm
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது

விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது

தூத்துக்குடி, செப். 28 -தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்31-ஆவது மாநில மாநாடு, தூத்துக்குடியில் ஞாயிறன்று பேரணியுடன் துவங்கியது.

இதில், பல்லாயிரணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணி நிறைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில், பிரதிநிதிகள் மாநாடு திங்களன்று காலை தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தலைமையில் துவங்கியது.

கொடி - மரம்

முன்னதாக, மாநாட்டையொட்டி நாகப்பட்டினத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மாநாட்டுக் கொடியை, சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பெ. சண்முகம் பெற்றுக்கொண்டார். தூத்துக்குடியில் இருந்து கொண்டுவரப்பட்ட கே. கிருஷ்ணன் நினைவு கொடிமரத்தை, மாநில துணைச் செயலாளர் ஏ. விஜயமுருகன் பெற்றுக்கொண்டார்.

நினைவுச் சுடர்கள்

மதுரையில் இருந்து எடுத்துவரப்பட்ட தோழர் என். சங்கரய்யா நினைவுச் சுடரை அகில இந்திய துணைத் தலைவர் ஹன்னன் முல்லா பெற்றுக்கொண்டார். பெரம்பலூரில் இருந்து எடுத்துவரப்பட்ட தோழர்கள் என். செல்லத்துரை, ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோரின் நினைவுச் சுடரை அகில இந்திய பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.விழுப்புரத்தில் இருந்து வந்த தோழர் எஸ். வேல்மாறன் நினைவுச் சுடரை மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன்பெற்றுக்கொண்டார். வேலூரில் இருந்து வந்த தோழர்கள் ஆர்.ஏ. லட்சுமணராஜ், எஸ். தயாநிதி, பி. சக்திவேல்ஆகியோரின் நினைவுச் சுடரை மாநில துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.திண்டுக்கல்லில் இருந்து எடுத்து வரப்பட்ட தோழர் எம். செல்லையா நினைவுச் சுடரை மாநிலக் குழு உறுப்பினர் கே. தமிழ்ச்செல்வியும், திருவண்ணாமலையில் இருந்து எடுத்துவரப்பட்ட தோழர் எஸ். பலராமன் நினைவுச் சுடரை மாநில துணைத் தலைவர் எம். முத்துராமுவும் திருவைகுண்டத்தில் இருந்து வந்த தோழர் ஆர். மகாலிங்கம்நினைவுச் சுடரை மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜனும் பெற்றுக்கொண்டனர்.

கொடியேற்றம்

தொடர்ந்து மாநில மாநாட்டுக் கொடியை, மாநில துணைத் தலைவர் கே. முகமது அலி ஏற்றி வைத்தார். மாநில

துணைத் தலைவர் பி. டில்லிபாபு அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். வரவேற்புக் குழுத் தலைவர் கே.பி. ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். அகில இந்திய பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

வாழ்த்துரை

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடுவிவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில செயலாளர் ஏ. சந்திரமோகன்ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

தூத்துக்குடியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31ஆவது மாநில பிரதிநிதிகள் மாநாட்டைத் திங்களன்று துவக்கி வைத்து, விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் உரையாற்றினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க 31-ஆவது மாநில மாநாட்டு பிரதிநிதிகளிடம் உண்டியல் மூலம் வசூலான ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 616, மதுராந்தகம் இடைத்தேர்தல் நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.