தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த திருப்பூரில் குழந்தைகளுக்கு மாநாடு

15 Nov 2025, 4:09 pm
அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த திருப்பூரில் குழந்தைகளுக்கு மாநாடு
<p><strong>அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த திருப்பூரில் குழந்தைகளுக்கு மாநாடு</strong></p> <p>திருப்பூர், நவ.15- மாணவர்களிடம் அறிவியல் மனப் பான்மையை ஏற்படுத்தும் நோக்கத் துடன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெள்ளியன்று 34 ஆவது திருப் பூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. &nbsp;தமிழ்நாடு அறிவியல் இயக்கம் &nbsp;ஒவ்வொரு ஆண்டும் &nbsp;மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத் தும் நோக்கத்துடன், மாணவர்களின் சுற் றுபுறச் சூழலில் உள்ள இயற்கை மற்றும் &nbsp;சமூகம் சார்ந்த சவால்களுக்கு அறி வியல் பூர்வமான ஆய்வுகள் மூலம் &nbsp;தீர்வுகளை கண்டறியும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக &nbsp;குழந்தைகள் அறிவியல் மாநாட்டை கடந்த 33 ஆண்டுகளாக நடத்தி வருகின் றனர். இந்தாண்டு 34 ஆவது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் &nbsp;மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திருப்பூரில் உள்ள அனைத்து ஒன்றி யங்களில் இருந்தும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், நீடித்த நிலைத்த நீர் மேலாண்மை என்ற தலைப்பின் கீழ் 120 &nbsp;க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சமர்ப் பித்தனர். இதில், தற்போது உள்ள நீர் &nbsp;நிலைகளின் மாசு, அது சாரந்து பாதிப்ப டையும் பல்லுயிர் பெருக்கம் அவசியம் &nbsp;பற்றியும், குறிப்பாக தண்ணீர் வியாபார &nbsp;பண்டமாக அதிகளவில் மாறி வரும் அவல நிலையை உணர்த்தும் விதமான &nbsp;மாணவர்களின் ஆய்வுகள் கவனிக்க வைத்தது. இந்நிகழ்வின் துவக்க விழாவில் &nbsp;மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் ராமமூர்த்தி மாணவர்களை வாழ்த்தி &nbsp;அறிவியல் மாநாட்டை துவக்கி &nbsp;வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பாராட்டி பரிசளித்தார். மேலும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் கௌரிசங்கர், நடராஜன், ராணி, கலை யரசி, இர்பான், கிருத்திகா, வளர்மதி உள்ளிட்டோரும், &nbsp;வழிகாட்டி ஆசிரி யர்கள், பெற்றோர்கள் என 200 க்கும் &nbsp;மேற்பட்டவர்கள் அறிவியல் மாநாட்டில் &nbsp;பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.