தோழர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல்
26 Feb 2026, 5:09 pm

தோழர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல்

தோழர் ஆர். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விழுப்புரம் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணுவின் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். சிபிஐ மாவட்டச் செயலாளர் ஆ.சவுரிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விசிக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான துரை ரவிக்குமார், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர். ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், விக்கிரவாண்டி எம்எல்ஏ அ. சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவர் ம. ஜெயச்சந்திரன், மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சிவா, விசிக மாவட்டச் செயலர் காணை வளவன், தேமுதிக நிர்வாகிகள் ஆதவன்முத்து, மனோ, சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளர்கள்

ஆர்.கலியமூர்த்தி, ஆர். முருகன், பொருளாளர் பி. பாலசுப்ரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரரும் சிபிஐ மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு மறைவையொட்டி, சிபிஎம், சிபிஐ, திமுக, விசிக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்து, காந்தி சிலை அருகே அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப. செல்வன், மாநகர செயலாளர் எம். பிரகலநாதன், செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், மாவட்டக்குழு உறுப்பினர் ச.குமரன், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், வழக்கறிஞர் அபிராமன், சிஐடியு நிர்வாகிகள் நாகராஜ், பாலாஜி, கமலக்கண்ணன், மற்றும் இடைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு மறைவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ப. செல்வன், சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், விசிக மாவட்டச் செயலாளர் சங்கத்தமிழன், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பி. சுந்தர், ச. குமரன், கே. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் சிபிஎம் சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் செயலாளர் பிரபாகரன், மாதர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுணா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவர் ந. ராதாகிருஷ்ணன், வட்டாரப் பொருளாளர் வி. குப்புசாமி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி பெ. அரிதாசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ம. திலகராஜ், ஒன்றியக் குழு நா. தங்கமணி ஆகியோர்கள் பங்கேற்றனர்.