தீக்கதிர் முக்கிய செய்திகள்
3 Apr 2026, 5:05 pm

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஏப்.23இல் ஊதியத்துடன் விடுமுறை தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: புதுச்சேரியில் ஏப்.9 ஆம் தேதியும் தமிழ கத்தில் ஏப்.23 ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு, தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. “1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் தின் பிரிவு 135 பி-இன் படி, வர்த்தகம், வணிகம், தொழில் நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் மக்களவை அல்லது மாநிலங் கள்/யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் அல்லது நாடாளுமன்ற/சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும், வாக்குப் பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப் பட வேண்டும். இதனை நடைபெறவிருக்கும் தேர்தல் நாளில் கடைபிடிக்க வேண்டும்” இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு: உயர் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு குறித்து தலை மைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், புதிய டிஜிபி சந்தீப்ராய் ஆகியோர் ஆலோ சனை மேற்கொண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1,332 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 1,025, பெண்கள் 306, மூன்றாம் பாலினத்தவர் 1 என்ற எண்ணிக்கையில் வேட்புமனுக்கள் உள்ளன. ஏப்ரல் 4 மற்றும் 6 ஆம் தேதி களில் மட்டுமே இனி வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். ஏப்.7 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். ஏப்.9 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். பிரதமரின் வருகை, அரசியல் கட்சித் தலைவர்களின் பரப்புரை ஆகியவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஏப்ரல் 6 மற்றும் 13 ஆம் தேதிகளில் தேர்தல் பாதுகாப்பிற்காக 250 கம்பெனி மத்திய ரிசர்வ் காவல்துறை படையினர் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலியாகும் டிடிவி தினகரன் முகாம் திமுகவில் இணைந்த அமமுக முன்னாள் எம்எல்ஏ

சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பான சூழ லில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் திமுக இணைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பாக போட்டியிட முடிவு செய்திருந்த மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ -வுமான என்.ஜி.பார்த்திபன், திமுகவில் இணைந்தார். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அம முகவுக்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளில் சோளிங்கர் இடம்பெறவில்லை. சோளிங்கர் தொகுதி பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டதால், டிடிவி தினகரன் ஏற்கனவே வேட்பாளராக அறிவித்திருந்த பார்த்திபன் கடும் அதிருப் திக்குள்ளானார். கடந்த வாரம் ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்த பார்த்திபன் அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித் தார். இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்தார். அவருடன் 80-க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகளும் திமுகவில் ஐக்கியமாயினர்.

பாலியல் வழக்கில் தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை, ஏப்.3 - பூவிருந்தவல்லி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசம் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக உள்ள பிரகாசம் என்ற குட்டி மீது, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திரு வள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவரை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அந்தப் பெண் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தெரிவித்ததை அடுத்து போலீசார் ஆறு பிரிவு களின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கோரி பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.