ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு கண்டனம் பிருந்தா காரத், எம்.வி. கோவிந்தன் தலைமையில் போராட்டம்!
4 Mar 2026, 5:01 pm
<p><strong>ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு கண்டனம் பிருந்தா காரத், எம்.வி. கோவிந்தன் தலைமையில் போராட்டம்!</strong></p>
<p>புதுதில்லி / திருவனந்தபுரம், மார்ச் 4 - ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள ஏகாதி பத்தியத் தாக்குதலையும், அரசியல் தலைவர்கள் மற்றும் அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்படுவ தையும் கண்டித்து, மார்ச் 3- செவ்வா யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தின. தலைநகர் புதுதில்லியில் நடை பெற்ற இந்த எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று உரையாற்றினார். ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனம் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பிருந்தா காரத், ஈரானில் 165-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் கொல்லப் பட்ட கொடூரமானத் தாக்குதலைச் சுட்டிக் காட்டி அமெரிக்க - இஸ்ரேலியக் கூட்டணியின் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாகச் சாடினார். “ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கள் பற்றிப் பேசும் அமெரிக்கா, ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்து, குழந்தைகளைக் கொன்று குவித்து வருவது சர்வதேசப் பயங்கரவாதத்தின் உச்சம்” என அவர் குறிப்பிட்டார். மேலும், மேற்கு ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், இயற்கை வளங்களைக் கைப்பற்றவும் அமெரிக்கா திட்டமிட்டுப் போரைத் தூண்டிவிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். கேரளத்தில் ஆவேசம் கேரள மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங் களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற கண்டனப் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் எம்.வி. கோவிந்தன், அமெரிக்கா வின் போர் வெறி உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள தாகத் தெரிவித்தார். “ஈரான் மீதான தாக்குதல் என்பது வெறும் ஒரு நாட்டின் மீதானத் தாக்கு தல் அல்ல; அது ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் மீதான தாக்கு தல். ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க ஆயுத வர்த்தகத்தை ஒரு கருவி யாகப் பயன்படுத்துகின்றன. சர்வ தேசச் சட்டங்களை மதிக்காத அமெரிக்காவின் இந்த அடாவடித் தனத்திற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள முற்போக்குச் சக்திகள் ஒன்றி ணைய வேண்டும்” என அவர் வலி யுறுத்தினார். மேலும், கேரளாவின் உழைக்கும் மக்கள் எப்போதும் ஏகாதி பத்தியத்திற்கு எதிரானப் போராட்டத் தின் முன்னணியில் இருப்பார்கள் என வும் அவர் சூளுரைத்தார். மோடி அரசின் மவுனம் கண்டிக்கத்தக்கது பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு, இஸ்ரேலுடன் கொண்டுள்ள பாதுகாப்பு உறவினால் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது இந்தியாவின் நீண்டகால வெளி யுறவுக் கொள்கைக்கு எதிரானது என பிருந்தா காரத் மற்றும் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் தெரிவித்தனர். “வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 90 லட்சம் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டு, யூத இனவெறி இஸ்ரேலுக்கு ஆதர வாக மோடி அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி, ஈரானுக்கு ஆதரவாகவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர். பிற மாநிலங்களில் போராட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் விஜய வாடாவில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தலைவர்கள் பங்கேற்று, போர்ச் சூழலால் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமையைக் கண்டித்தனர். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நடை பெற்ற மாணவர் - இளைஞர் பேரணி களில், அமெரிக்கத் தூதரகங்கள் முற்று கையிடப்பட்டன. பீகார், பஞ்சாப் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களி லும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் விரி வானப் போராட்டங்கள் முன்னெ டுக்கப்பட்டன. சர்வதேசச் சட்டங்களை மதிக்கக் கோரிக்கை • சர்வதேசச் சட்டங்களையும் ஐநா சாசனத்தையும் மதிக்காமல் ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். • அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் அர சியல் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது சர்வதேசத் தடைகள் விதிக்கப்பட வேண்டும். • இந்திய அரசு இஸ்ரேலுடனான அனைத்துப் பாதுகாப்பு ஒப்பந்தங் களையும் ரத்து செய்ய வேண்டும். - என்று போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரித் தலைவர்கள் கோரிக்கை களை முன்வைத்தனர்.</p>
