தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மெட்ரோ திட்டம் நிராகரிப்புக்கு கண்டனம்

28 Nov 2025, 2:28 pm
மெட்ரோ திட்டம் நிராகரிப்புக்கு கண்டனம்
<p><strong>மெட்ரோ திட்டம் நிராகரிப்புக்கு கண்டனம்</strong></p> <p>கோவை, நவ.28- கோவையில் மெட்ரோ ரயில் திட் டத்தை நிராகரித்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து கோவை மாநக ராட்சியில் கண்டன தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. &nbsp;கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் விக்டோரியா ஹாலில் வெள்ளியன்று மேயர் ரங்க நாயகி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச் செல்வன், மாமன்ற உறுப் பினர்கள் மற்றும் அதிகாரிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியவுடன், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராக ரித்த ஒன்றிய அரசுக்கு கண்ட னம் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த விவாதத்தில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்ட னங்களைப் பதிவு செய்தனர். அப்போது கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முறை யான அறிக்கையை மாநில அரசு தயார் செய்து கொடுக்கவில்லை என &nbsp;குற்றம் சாட்டினார். இதை எதிர்த்து திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கவுன் சிலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது, அதி முக கவுன்சிலர் பிரபாகரன் கையில் வைத்திருந்த கண்டன பதாகைகளை திமுக கவுன்சிலர்கள் பிடுங்கினர். இதைத் தொடர்ந்து, அதிமுக கவுன் சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். &nbsp;இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி சார்பில் ஒன் றிய அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சலசலப்பில் ஈடுபட்ட அதி முக கவுன்சிலர் பிரபாகரனை இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உத் தரவிட்டார். கோவை மத்திய சிறை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ் வாயன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த பூங்கா விற்கான நுழைவுக் கட்டணம் முத லில் பெரியவர்களுக்கு ரூ.25, குழந் தைகளுக்கு ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், கட்டணம் அதிகம் எனப் பொதுமக்கள் கருதுவதால், நுழைவுக் கட்டணங்கள் மறு நிர்ண யம் செய்யப்பட்டு, மாமன்றக் கூட்டத் தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட் டது. இதன்படி, பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.5, நடை பயிற்சி மேற்கொள்ள மாதம் ரூ.100, கேமரா ரூ.25, வீடியோ கேமரா ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம், குறும்பட பதிவிற்கு ரூ.2.500 என மறு நிர்ணயம் செய்யப்பட்டது. முன்னதாக, மாமன்றக் கூட்டத் தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்றக் குழு தலைவர் வி. இராமமூர்த்தி, செம்மொழிப் பூங் காவை திறந்து வைத்த முதலமைச் சருக்கும், பூங்கா பணிக்காகப் பணி யாற்றிய அனைவருக்கும் நன்றி யைத் தெரிவித்தார். மேலும், அவர் &nbsp;பேசுகையில், சுகாதாரப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியா ளர்கள் நியமிக்க கூடாது என்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப் பாடு, தற்போது இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் ஊழியருக்கு ரூ.600 மற்றும் ரூ.450 என வெவ்வேறு ஊதி யம் நிர்ணயம் செய்துள்ளன. இந்த ஊதிய வேறுபாடு நீக்கப்பட்டு ஒரே &nbsp;மாதிரியான ஊதியத்தை அதிகரித்து வழங்கப்பட வேண்டும். செம்மொ ழிப் பூங்காவிற்கு வழங்கப்பட்ட முக் கியத்துவத்தில் 25% முக்கியத்து வம் 3 ஆவது குடிநீர் திட்டத்திற்கும் &nbsp;வழங்க வேண்டும். காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, சின் னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, துடியலூர் பகுதிகளில் ஆமை வேகத் தில் நடைபெறும் இத்திட்டப் பணி களை கூடுதல் நேரம் ஒதுக்கி வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண் டும். சின்னவேடம்பட்டி ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் அமைக்க உத் தேசிக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அந்த இடத்தில் நிலையத்தை அமைக்காமல் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். துவங்கப் படாத பணிகள்: காந்திநகர் பிரதான &nbsp;சாக்கடை உள்ளிட்ட ஒப்பந்தம் விடப் பட்ட பணி உத்தரவு கொடுக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட பணிகள் துவங் கப்படாமல் உள்ளதாகவும், அதனை 3 மாதங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்துப் பேசிய மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிர பாகரன், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் துவங்கப்படாத மற் றும் முடிக்கப்படாத பணிகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு கவுன்சி லர்களை கேட்டுக் கொண்டார். அப் பணிகளை விரைந்து முடிக்க நடவ டிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி யளித்தார். முன்னதாக, கோவை மாநக ராட்சி 46 ஆவது வார்டு நியமன கவுன் சிலராக மாற்றுத்திறனாளியான ராஜ பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.