முந்தய பக்கம்

அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும்

7 Apr 2026, 5:42 pm
அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும்
<p><strong>அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும்</strong></p> <p>உடுமலை, ஏப்.7- உடுமலை நகரில் வசிக் கும் மக்களுக்கு கலைஞர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் காங்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று செவ்வா யன்று உடுமலை நகரின் 1,2,3 மற்றம் நான்காம் வார்டுகளில் கூட்டணி கட்சி யினருடன் &nbsp;பிரச்சாரம் செய்த போது வேட்பாளர் &nbsp;ஜெயக் குமார் உறுதி அளித்தார். முன்னதாக உடுமலைப்பேட்டை சட்ட மன்ற தொகுயின் திமுக வேட்பாளர் ஜெயக் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டார். அப்போது பொது மக்களிடம் பேசுகை யில் தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்றும் இந்த தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் உடு மலை நகரில் கலைஞர் வீடுகட்டும் திட்டத் தின் கீழ் காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அனைத்து வார்டுகளிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இணைய வசதிகளு டன் கூடிய நூலகம் செயல்படுத்தப்படும். தரமான சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். இப்பிரச்சாரத்தில் பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக நக ரச் செயலாளர் வேலுச்சாமி, சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரச் செய லாளர் தண்டபாணி, நிர்வாகிகள் ராஜன், &nbsp;மாலினி, ராமசாமி, காங்கிரஸ் கட்சியின் நகரத் &nbsp;தலைவர் ரவி, சிபிஐ தாலூகா செயலாளர் சித்ரா ரணதேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram