தோழர் ஏசுதாஸ் காலமானார்
16 Jul 2026, 9:40 pm
<p><strong>தோழர் ஏசுதாஸ் காலமானார் </strong></p><p>திருவட்டார், ஜூலை 16- குமரி மாவட்டம் முக்கம்பாலா தனியார் எஸ்டேட் பால்வடிப்பு தொ ழிலாளியாக இருந்த தோழர் ஏசுதாஸ் காலமானார். இவர் ,சிஐடியு சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். அப்போது தொழி லாளர் பிரச்சனைகளில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். ஒரு முறை ஜெயமாருதி தோட்ட முதலாளிக்கும் தொழிலா ளர்களுக்கும் ஏற்பட்ட தொழிலாளர் பிரச்சனையில் நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறையினர் தொழிலா ளர்களை வேட்டையாடியது .அப்பேரது ஏசுதாஸ் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேர்க்கிளம்பி பேரூராட்சியில் கவுன்சிலராக தேர்வு செய்யபட்டு செயல்பட்டார். அவர் வாழ்ந்துவந்த சித்தி ரங்கோடு முகிலன் கரைகிராமத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை திரட்டுவதில் முக்கிய பங்காற்றினார். அவருக்கு இண்டு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் உண்டு. அன்னாரது மறைவுச்செய்தியறிந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயலாளர் என் எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, ஆர்.ரவி, என்.உஷா, ரெஜீஷ் குமார் மற்றும் கட்சியினர் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p>
