முந்தய பக்கம்

தோழர் வேல்மாறன் படம் திறப்பு: பெ.சண்முகம் - தலைவர்கள் அஞ்சலி!

8 Aug 2026, 9:49 pm
தோழர் வேல்மாறன் படம் திறப்பு:  பெ.சண்முகம் - தலைவர்கள் அஞ்சலி!

தோழர் வேல்மாறன் படம் திறப்பு: பெ.சண்முகம் - தலைவர்கள் அஞ்சலி!

விழுப்புரம், அக்.8-விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில் மறைந்த தோழர் வேல்மாறனின் உருவப் படம் திறப்பு நிகழ்வு, விழுப்புரம் மாவட் டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கலந்துகொண்டு மறைந்த தோழர் வேல்மாறனின் உருவப் படத்தை திறந்து வைத்து மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர். ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கீதா, கள்ளக்குறிச்சி மாவட்டச்செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ப.செல்வன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஜி. ஆனந்தன், இ. சங்கர், மாவட்டச்செயற்குழு உறுப் பினர்கள் எஸ். முத்துக்குமரன், ஆர். மூர்த்தி, ஜி. ராஜேந்திரன், சே. அறிவழகன், ஆர்.டி. முருகன், மூத்த உறுப்பினர் ஆர். உதயகுமார், வட்டச் செயலாளர் எஸ். கணபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். எஸ். சையத் ஜஹாங்கீர், ஆர்.நளினிஆகியோர் நன்றி கூறினர்.

Share
FacebookXWhatsAppTelegram