முந்தய பக்கம்

தோழர் வீரபாண்டி ஆர்.குமார் காலமானார்

1 Jul 2026, 1:32 am
தோழர் வீரபாண்டி ஆர்.குமார் காலமானார்
<p><strong>தோழர் வீரபாண்டி ஆர்.குமார் காலமானார்</strong></p><p>திருப்பூர், ஜூன் 30- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் திருப்பூர் மாவட்ட செயலாளர், நொய்யல் பண்பாட்டு அமைப்பின் அறங்காவல் குழு உறுப்பினர், வீரபாண்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் வீரபாண்டி ஆர்.குமார் திங்களன்று மாரடைப்பால் காலமானார். அவரது இறுதி நிகழ்வு திருப்பூர் மாநகராட்சி தெற்கு ரோட்டரி மின் மயானத்தில் திங்களன்று நடைபெற்றது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், தமுஎகச-வின் மாநில துணைத்தலைவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில செயற்குழு உறுப்பினர் அ.கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் வெண்ணிலா சுந்தர்ராஜன், மதிமுக மாவட்ட செயலாளர் கந்தசாமி, திராவிட கழக மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சிவகாமி உள்ளிட்டோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். மறைந்த தோழர் குமார் குடும்பத்தின் சார்பில் எழுத்தாளரும், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினருமான கோவை சதாசிவம் நன்றி தெரிவித்தார். இறுதி நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாநில குழு உறுப்பினர்கள் ஈரோடு சங்கரன், ஷர்மிளா, திருப்பூர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.கணேசன், மாவட்டத் தலைவர் க.சம்பத்குமார், பொருளாளர் மு.திருப்பதி, மைதிலி நிதர்சனா உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram