தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் வி.கே.பழனி நூற்றாண்டு பிறந்தநாள் மதுரையில் தோழர்கள் - அரசியல் கட்சியினர் வாழ்த்து

11 Jan 2026, 2:59 pm
தோழர் வி.கே.பழனி நூற்றாண்டு பிறந்தநாள் மதுரையில் தோழர்கள் - அரசியல் கட்சியினர் வாழ்த்து

தோழர் வி.கே.பழனி நூற்றாண்டு பிறந்தநாள் மதுரையில் தோழர்கள் - அரசியல் கட்சியினர் வாழ்த்து

மதுரை, ஜன.11- மதுரை மண்ணின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வி.கே. பழனி அவர்களின் நூறாவது பிறந்த நாள் விழா, ஞாயிற்றுக்கிழமை மதுரை பழங்காநத்தம் புதிய வாலிபர் திரேகப் பயிற்சி சாலையில் நடைபெற்றது. ஆர்.பெரியசாமி தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், அ.கோவிந்தராஜன், மாநகராட்சி மேயர்  (பொ) தி.நாகராஜன், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் பி.ஜீவா, கு.கணே சன், எஸ்.சந்தியாகு, பகுதிச் செய லாளர்கள் பி.வீரமணி, ஏ.எஸ்.செந்தில்குமார், பி.கோபிநாத் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மேலும், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், மூத்த தோழர் ஏ.பெரியசாமி, தீக்கதிர் மேலாளர் ஜோ.ராஜ்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.எஸ்.போஸ், திமுகவைச் சேர்ந்த எஸ்.வி.சுதன் மற்றும் எல்.ஞானஒளிவு, அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, அம்மா பேரவை மாநில உதவி தலை வர் பா.வெற்றிவேல் உள்ளிட்ட அனை த்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் களும் நேரில் சந்தித்து தோழர் வி.கே. பழனிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். பெ.சண்முகம் வாழ்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக தோழர் வி.கே.பழனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.