தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் யு.கே.சிவஞானம் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல்

7 Oct 2026, 1:05 am
தோழர் யு.கே.சிவஞானம் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தோழர் யு.கே.சிவஞானம் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோவை, அக்.6-மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மறைந்த தோழர் யு.கே.சிவஞானம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடகோவை காமராஜபுரம் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர் யு.கே.சிவஞா

னம். இவரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை, காமராஜபுரம் கிளை அலுவலகத்தில் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் என்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் யு.கே.சிவஞானம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், திராவிடர் சுயமரியாதை கழகம் சார்பில் நேருதாஸ், தமிழ் புலிகள் கட்சியின் இளவேனில், புரட்சிகர இளைஞர அமைப்பு மலரவன். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எம்.அமுதா, செயலாளர் ஜெ.உஷா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, சிபிஎம் கிழக்கு நகரக்குழு செயலாளர்என்.சுபாஷ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ராஜன், துணைத் தலைவர் கே.ரத்தினகுமார், காமராஜபுரம் கிளை செயலாளர் இளையராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றுயு.கே.சிவஞானம் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முடிவில்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் த.நாகராஜ்நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.