தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கொடி இயக்கத்தின் மாபெரும் வர்க்கப் போராளி தோழர் டி.ஆர். சுப்பிரமணியம் - பி. சம்பத்

27 Sept 2026, 9:07 pm
செங்கொடி இயக்கத்தின் மாபெரும் வர்க்கப் போராளி தோழர் டி.ஆர். சுப்பிரமணியம் - பி. சம்பத்

செங்கொடி இயக்கத்தின் மாபெரும் வர்க்கப் போராளி தோழர் டி.ஆர். சுப்பிரமணியம் - பி. சம்பத்

தோழர் டி.ஆர். சுப்பிரமணியம் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உறுப்பினர். 12 வயதிலேயே விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டுகாங்கிரஸில் இணைந்தார். பிரிட்டிஷ் அடக்குமுறை யால் நிகழ்ந்த சில வன்முறைகளைக் காரணம் காட்டி காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற்றதைஅன்றைய இளைய சமுதாயம் ஏற்கவில்லை; அதில் சுப்பிரமணியமும் ஒருவர். பின்னர் சில ஆண்டுகள்பயங்கரவாத இயக்கத்தில் செயல்பட்ட அவர், அப்பாதை தவறானது என உணர்ந்து கம்யூனிஸ்ட்இயக்கத்தில்தன்னை இணைத்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதையும் அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்.

சிறைச்சாலை, சித்திரவதைகள், தலைமறைவு என பல்வேறு அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டவர் இவர். அவரது வரலாறுதனிமனித வரலாறு அல்ல — விடுதலைப் போராட்ட, கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் மிக முக்கியமான ஓர் அத்தியாயம். எனது அரசியல் வாழ்வில் அவரோடுஇணைந்து செயல்பட்ட காலம் மறக்க முடியாத, மனதை நெகிழவைத்த காலமாகும்.

அச்சமற்ற இளைஞனின் தொடக்கம்

கோவை மாவட்டம் பேரூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த சுப்பிரமணியம், அரசியல் செயல்பாட்டிற்குத் தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததால் 12 வயதிலேயே கோவையிலிருந்து வெளியேறி சென்னை வந்தார். ஒருஹோட்டலில் சர்வராக வேலை செய்துகொண்டே விடுதலைப் போராட்டநடவடிக்கைகளில் பங்கெடுத்தார். பயங்கரவாத இயக்கத் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் அமீர் ஹைதர்கானைச் சந்தித்தார்.

இளைஞனின் துடிப்பையும் அரசியல் ஆர்வத்தையும் கண்ட அமீர் ஹைதர் கான், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துவது தவறல்ல; ஆனால் அந்த ஆயுதங்களைத் தனிநபர்கள் அல்ல, மக்கள் ஏந்த வேண்டும். மக்களைத் திரட்டாமல் மாற்றமோ புரட்சியோ சாத்தியமல்ல” என்றார் — இவ்வார்த்தைகள் தன் மனதைப் புரட்டிப்போட்டதாக சுப்பிரமணியமே பிற்காலத்தில் தெரிவித்தார்.

சென்னை சதி வழக்கில் சேர்க்கப்பட்ட அவர், சென்னை, அலிப்பூர், கோவை, மதுரை, பாளையங்கோட்டை என பல சிறைகளில் ஆண்டுக்கணக்கில்அடைக்கப்பட்டார்; அவசரகாலமும் இதற்கு விதிவிலக்கல்ல. அலிப்பூர் சிறையில் காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டுத் தப்பி தலைமறைவானார் —மதில்சுவர் கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்த அச்சிறையிலிருந்து, மின்சாரம் இல்லாத நேரம் பார்த்துத்தப்பிய அவர், உயிரைப் பணயம் வைத்தே கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பாடுபட்டார்.

சென்னை கட்சித் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், சி.எஸ். சுப்பிரமணியன், எஸ்.வி. காட்டே, ஜீவானந்தம் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. தேவையான மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று உதவ வேண்டும் என்ற கட்சி முடிவின்படி, சவால்கள் நிறைந்த நெல்லை மாவட்டத்திற்கு எம்.ஆர். வெங்கட்ராமனுடன் அனுப்பப்பட்டார். சில காலத்தில் வெங்கட்ராமன் சென்னை திரும்ப, சுப்பிரமணியம் நெல்லையிலேயே தங்கி, தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் அம்மண்ணுக்கே அர்ப்பணித்தார்.

திருநெல்வேலி மண்ணில்

புதிய அத்தியாயம்ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் தங்கி சுற்றுப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்ற முடிவானது. இப்பகுதிப் போராட்டங்கள் எதிர்கொண்ட அடக்குமுறையும் சமூக விரோதிகளின் தாக்குதலும் சிறியவை அல்ல; அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டார். இப்போராட்டங்களால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குத்தகை விவசாயிகள் நில உரிமையாளர்களானார்கள்; பல்லாயிரக்கணக்கான தலித் விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வும் குடிமனை பட்டாவும் பெற்று வாழ்நிலையில் உயர்ந்தனர். இவர்களின் இதயங்களில் நாயகனாக அவர் விளங்கினார்.

அச்சமற்ற போராளி

அதிகார வர்க்கத்திற்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தார் சுப்பிரமணியம். ஒருமுறை அவர் தங்கியிருந்த கட்டிடத்தை இடிக்க புல்டோசருடன் வந்த அதிகாரிகள் வெளியேறுமாறு கூறியபோது, எந்தச் சலனமும் இன்றிப் பத்திரிகை படித்தபடியே “போய் இடி” என்றார் — அதிகாரிகளே பதற்றமடைந்தனர்; சிறிது நேரத்தில் கட்சி ஊழியர்களும் மக்களும் திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க, புல்டோசருடன் திரும்பிச் சென்றனர். மற்றொருமுறை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இழிவானவார்த்தைகளால் மிரட்டியபோது, “இதன் விளைவுகளை நீர் சந்திக்க நேரிடும்” என எச்சரித்து, தேச விடுதலைப் போராளியான தன் மனநிலை பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

தண்டனை உறுதியான நிலையில்,அவ்வதிகாரியும் குடும்பத்தினரும் நேரடியாக வந்து மன்னிப்புக் கோரவே, மனிதாபிமானம் மிக்க சுப்பிரமணியம்வழக்கைக் கைவிட்டார் — இது ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் பிரபலமான நிகழ்வு.விவசாய இயக்கம் மட்டுமின்றி தொழிற்சங்க இயக்கத்திலும் அவர் பங்களிப்பு பெரியது; சென்னையிலும் தூத்துக்குடியிலும் ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டங்கள் உள்பட பலவற்றில் பங்கேற்றார்.

இக்கட்டுரையாளர் (தோழர் பி. சம்பத்) தூத்துக்குடிப் பகுதியில் இயக்கப் பணியாற்றியபோது வலுவான தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் தோழர் நல்லசிவன், நெல்லை மாவட்டக் கட்சித் தலைமை மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் சுப்பிரமணியத்தின் பங்கும் முக்கியமானது. 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் பெரும்பாலும் மார்க்சிஸ்ட் கட்சி செல்வாக்கின் கீழ் வந்தது. இப்பின்னணியில் 1996இல் சிபிஐ(எம்)–திமுக அணி சார்பாகப் போட்டியிட்ட பி. சம்பத் வெற்றி பெறாவிட்டாலும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் கணிசமான வாக்குகள் பெற்றார். இப்பாரம்பரியத்தில், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவராக உலகம்மாள் இரு முறை வெற்றி பெற்றார்; தென்திருப்பேரை பேரூராட்சித் தலைவராக பாப்பா கசமுத்து வெற்றி பெற்றார்; ஸ்ரீவைகுண்டத்தில் ஐந்து கவுன்சிலர்களும் வேறு சில ஊராட்சித்தலைவர்களும் சிபிஐ(எம்) சார்பாகத் தேர்வானார்கள் — இவை அனைத்திற்கும் தோழர் சுப்பிரமணியம் தலைமையேற்று நடத்திய போராட்டங்களே அடித்தளம்.

கடைசி வரை கம்யூனிஸ்ட்

திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்நாளைக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே அர்ப்பணித்த சுப்பிரமணியம், நெல்லை மாவட்டச் செயற்குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றினார். கட்சியின் அரசியல் பாதையில் உடன்பாடும் ஈடுபாடும் கொண்டிருந்த அவருக்கு, அதை அமல்படுத்தும் விதம் குறித்துச் சொந்தக் கருத்துகள் இருந்தன; பெரும்பான்மை ஏற்காதபோதும் கட்சி முடிவை அமல்படுத்திய சிறந்த கம்யூனிஸ்டாகவே இறுதிவரை விளங்கினார்.

இறுதிக் காலம் கடுமையானதாக இருந்தது. தோழர்கள் ரோசன் அலி, சிவன், சீனிவாசன் உள்ளிட்

டோர் துணையாக இருந்தனர். நோய்வாய்ப்பட்ட நிலையில் சொந்த மாவட்டமான கோவை சென்ற அவரை, தோழர் கே. ரமணி, மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கிடு, பி.ஆர். நடராஜன், யு.கே. வெள்ளியங்கிரி, நஞ்சப்பன், சி.பத்மநாபன், பி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்; நோயின் தீவிரத்தால் கோவையிலேயே காலமானார். கோவை மாவட்டத் தலைவர்கள் மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த, செய்தியறிந்த நெல்லை மாவட்டக் குழு செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணனை (முன்னாள் எம்எல்ஏ) கோவைக்கு அனுப்பியது; பின் நெல்லை தோழர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தி மரியாதை செலுத்தினர்.தோழர் டி.ஆர்.எஸ். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறக்க முடியாத வர்க்கப் போராளி; அவரது நினைவுகள்என்றென்றும் நமக்கு உத்வேகமூட்டும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை மென்மேலும் வலுப்படுத்த அவர் பெயரால்உறுதியேற்போம்.

தோழர் டி.ஆர்.எஸ். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகுந்த சிரமங்களும் முன்முயற்சியும் எடுத்து ஏராளமான விவரங்களை தூத்துக்குடி மாவட்டத் தோழர்கள் தி. சீனிவாசனும், தி. கண்ணனும் திரட்டியுள்ளனர். வரலாற்று நூலை தோழர் தி. சீனிவாசன் திறம்படவே எழுதியுள்ளார்; வேறு பல தோழர்களும் இதற்குத் துணை நின்றனர். இவர்கள்அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுகள். தோழர் டி.ஆர்.எஸ்.க்குப் பெருமை சேர்க்கும் வகையில் இவ்வரலாற்று நூலைத் தூத்துக்குடி மாவட்டக்குழுவும் தமிழ்நாடு விவசாய சங்கமும் வெளி யிட்டுள்ளன. சிறப்பான முறையில் அச்சிட்டு இந்நூல் வெளிவரபாரதி புத்தகாலயம் தன் பங்கைச் சிறப்புற நிறைவேற்றியுள்ளது. இவ்வமைப்புகளுக்கும் நமது வாழ்த்துகளும்பாராட்டுகளும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தூத்துக்குடி மாநில

மாநாட்டுப் பேரணி - பொதுக் கூட்டத்தில் தோழர் டி.ஆர். சுப்பிரமணியம் வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.