செய்யாறில் தோழர் சோலை பழநி படத்திறப்பு
21 Feb 2026, 4:39 pm
<p><strong>செய்யாறில் தோழர் சோலை பழநி படத்திறப்பு </strong></p>
<p>செய்யாறு,பிப்.21- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் கீழ் புதுப்பாக்கம் வஉசி தெருவில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பி னரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் முன்னாள் மாநில நிர் வாகியுமான சோலை பழநி கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி காலமானார். அவரது படத்திறப்பு விழா சனிக் கிழமை அன்று (பிப். 21) செய்யாறில் நடைபெற்றது. அறிவுச்சோலை அறக்க ட்டளை காப்பாளர் எம். தாமோதரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க வட்டார செய லாளர் வி.சி.சேகர் வர வேற்றார், கவிஞர் நா.வே. அருள் விழாவை ஒருங்கி ணைத்தார், மாவட்ட குழு உறுப்பினர் டி. வெங்கடே சன் முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு சோலை பழனி படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். கம்யூனிஸ்டாக வாழ்ந்து தன் வாழ்வை இந்த சமுதாயத்திற்கு ஒப்படைத்தார் என்ற முறையில் செய்யாறு பகுதி மக்களின் அன்பை சோலை பழநி பெற்றுள்ளார் என்றார். கல்வித்துறையில் பாதுகாப்பான சூழல் இல்லாத நிலையில் சக மனிதனை அரவணைத்து செல்லும் விதமாக வாழ்ந்தவர் அவர். அவரின் கம்யூனிச பொதுவுடமை கோட்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு சேர்க்க வேண்டிய பணிகளை நாம் தொடர வேண்டும். சோலை பழனி படத்திறப்பு விழாவில், எதிர்காலத்தில் ஒரு அறிவு சமூகத்தை உருவாக்குவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி என்றும் அவர் தெரிவித்தார். சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் இ.முத்துக்குமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மு.மணிமேகலை, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், திமுக நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வெங்க டபதி, மாநில பொதுச் செய லாளர் நா. பருவதராஜன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் இரா. சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்கு மார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன் ஆகியோர் உரையாற்றினர். நூல் வெளியீடு இந்த நிகழ்வில் சோலை பழனி எழுதிய “திருக்குறள் தெரிந்து என்ன செய்யப் போகிறேன்” என்ற நூலை சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இ.முத்துக் குமார் வெளியிட செய்யாறு ஐடிஐ தாளாளர் ஆர். லோகநாதன் பெற்றுக் கொண்டார், “முகநூல் தந்த வரம்” என்ற நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வெளியிட, தலைமையா சிரியர் காஞ்சனா பெற்றுக் கண்டார். நிகழ்ச்சியில் அறிவுச்சோலை அறக்கட் டளை துவக்க நிகழ்ச்சியும் சேர்ந்து முப்பெரும் விழா வாக நடைபெற்றது. நிறை வாக அறிவுச்சோலை அ.ச. கங்காதரன் நன்றி கூறினார்.</p>
