முந்தய பக்கம்

தோழர் எஸ்.கே.சிவசாமி படத்திறப்பு

27 May 2026, 9:18 pm
தோழர் எஸ்.கே.சிவசாமி படத்திறப்பு

தோழர் எஸ்.கே.சிவசாமி படத்திறப்பு

திருவாரூர், மே 27 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் பல்வேறு கட்சிப் பொறுப்பு களில் பணியாற்றி தீக்கதிர் முகவராக செய லாற்றிய சிபிஎம் மூத்த தோழர் எஸ்.கே. சிவசாமியின் படத்திறப்பு கொரடாச்சேரி, பத்தூர் மேல்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. படத்திறப்புக்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.கோபிராஜ் முன்னிலை வகித்தார். சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா, தோழர் சிவ சாமி உருவப்படத்தை திறந்து வைத்து மல ரஞ்சலி செலுத்தினார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், பி. கந்தசாமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ். கேசவராஜ், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி மற்றும் பலர் புகழஞ்சலி உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram