முந்தய பக்கம்

தோழர் சங்கிலிதுரை படத்திறப்பு

7 Apr 2026, 5:38 pm
தோழர் சங்கிலிதுரை படத்திறப்பு
<p><strong>தோழர் சங்கிலிதுரை படத்திறப்பு</strong></p> <p>திருச்சிராப்பள்ளி,ஏப்,7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரவை மற்றும் துறையூர் ஒன்றியச் செயலாளர் மறைந்த தோழர் க. சங்கிலிதுரை படத்திறப்பு திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்றது. &nbsp;நிகழ்ச்சிக்கு, துறையூர் ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆனந்தன் வரவேற்புரையாற்றினார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், சுப்பு, முத்துக்குமார் மற்றும் சிவானந்தம் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். தோழர் சங்கிலிதுரை படத்தை மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் திறந்து வைத்து புகழஞ்சலி உரை ஆற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram