தோழர் சதாசிவம் காலமானார்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>தோழர் சதாசிவம் காலமானார்</strong></p>
<p>திருத்துறைப்பூண்டி, பிப்.24- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் வங்கநகர் ஊராட்சி ஓவர்குடி கிளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ் என்று அழைக்கப்படும் கே. சதாசிவம் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியவர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளராகவும், ஓவர்குடியில் ஒரு முன்னணி தலைவராகவும் விளங்கிய அருமை தோழர் கே.சதாசிவம் இறப்பிற்கு, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், ஒன்றியச் செயலாளர் கே. பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் எம். ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.</p>
