முந்தய பக்கம்

தோழர் எஸ்.பி. மணிகண்டன் காலமானார்

8 Mar 2026, 3:42 pm
தோழர் எஸ்.பி. மணிகண்டன் காலமானார்
<p><strong>தோழர் எஸ்.பி. மணிகண்டன் காலமானார்</strong></p> <p>தீக்கதிர் மதுரைப் பதிப்பில் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஊழியராகப் பணியாற்றி வந்த தோழர் எஸ்.பி. மணிகண்டன் மார்ச் 8 (ஞாயிறு) அன்று காலமானார். அவருக்கு வயது 64. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பற்றுறுதி மிக்க ஊழியரான அவரது உடல், மதுரை தீக்கதிர் அலவலக வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் மற்றும் தீக்கதிர் ஊழியர்கள், கட்சியின் மாநகர் மாவட்டத் தோழர்கள் திரளாக கூடி அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram