தோழர் எஸ்.தயாநிதி உடல் அரசு மருத்துவமனைக்கு தானம்
2 Mar 2026, 3:30 pm
<p><strong>தோழர் எஸ்.தயாநிதி உடல் அரசு மருத்துவமனைக்கு தானம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்- திரு ப்பத்தூர் மாவட்ட முன்னாள் செயலாளர், தற்போதைய மாவட்ட செயற்குழு உறுப்பி னர் தோழர் எஸ். தயாநிதி மார்ச் 1ஆம் தேதி கால மானார். அவரது உடல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. கடந்த ஜனவரியில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இரு தய அறுவை சிகிச்சை நடை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.மார்ச் 1 அன்று மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனை அழைத்து செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63. தோழர் எஸ்.தயாநிதி யின் குடும்பமே கட்சி குடும்பம். அவரோடு இணைந்து கட்சியில் பணி யாற்றி வரும் தோழர் எஸ். சங்கரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலூர்- திருப்பத்தூர் மாவட்ட செய லாளராகவும் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். தோழர் எஸ். தயாநிதி யின் உடல் அஞ்சலிக்காக வேலூர் சத்துவாச்சாரி பகுதி - 2ல் 54வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பி னர்கள் டி.ரவீந்திரன், கே. சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, ஏ.ஆறுமுக நயினார், என்.நம்புராஜன் ஆகியோர் மாலை அணி வித்து அஞ்சலிசெலுத்தினர். கட்சியின் மூத்த தலை வர்கள், மாவட்டச் செயலா ளர்கள் உட்பட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தி னர். மேலும் மூத்த தோழர் வே.மீனாட்சி சுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர் கள் ஆர்.கருமலையான், என்.குணசேகரன் முன் னாள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வ சிங், நூர்முகமது உள்ளிட் டோர் தொலைபேசியில் தொடரபு கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர். பின்னர் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தி ற்கு மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன் தலைமை தாங்கினார். தயாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தலை வர்கள் உரையாற்றினர். ஊர்வலம்-உடல் தானம் பின்னர், தயாநிதி உடல் அவரது இல்லத்தில் இருந்து ஆர்டிஓ சாலை வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடுக் கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.</p>
