முந்தய பக்கம்

புனல்குளத்தில் தோழர் ராஜேந்திரன் நினைவு கல்வெட்டு, கொடியேற்று விழா

28 Jun 2026, 11:25 pm
புனல்குளத்தில் தோழர் ராஜேந்திரன் நினைவு கல்வெட்டு, கொடியேற்று விழா
<p><strong>புனல்குளத்தில் தோழர் ராஜேந்திரன் நினைவு கல்வெட்டு, கொடியேற்று விழா</strong></p><p>புதுக்கோட்டை, ஜுன் 28- கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளத்தில் மறைந்த தோழர் பி. ராஜேந்திரன் நினைவாக கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட தோழர் பி. ராஜேந்திரன் சமீபத்தில் இயற்கை எய்தினார். அவரது நினைவாக அவரது சொந்த கிராமமான புனல்குளத்தில் கல்வெட்டு திறப்பு மற்றும் கட்சி கொடியேற்றுவிழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. விழாவிற்கு கட்சியின் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கல்வெட்டை திறந்து வைத்து மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ராமையன், த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரெத்தினவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.சித்திரைவேல், கெ.தனபால், அண்ணாதுரை, வெள்ளைச்சாமி, கிளைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram