தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

23 Feb 2026, 5:35 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீவிர சிகிச்சையில் தோழர் ஆர்.நல்லகண்ணு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், 101 வயதான நல்ல கண்ணு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில்  தவறி விழுந்து காயமடைந்த அவர், பின்னர் டிசம்பர் மாதம் மூச்சுத் திணறல் கார ணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தொடர்ந்து இம்மாதம் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணு வின் உடல்நிலை தற்போது பின்னடைவு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டி: மதிமுக அறிவிப்பு

சென்னை, பிப்.23 - 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்ட ணியில் இடம்பெற்றுள்ள மதிமுக இந்த முறை தனி  சின்னத்தில் போட்டியிடும்  என்று மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தெரி வித்தார். எத்தனை தொகுதி கள் என்பதை பேச்சுவார்த்தை  முடிவில் அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.  திமுக தலைமையில் அமைக்கப்பட்ட பேச்சு வார்த்தைக் குழுவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அமைத்த நான்கு பேர் கொண்ட குழு பிப்.23 ஆம் தேதி திங்கட்கிழமை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுனராஜ் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இந்த முறை  மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரி வித்தார். மமக 5 தொகுதிகள் கோரிக்கை முன்னதாக, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா திமுக கூட்டணி யில் ஐந்து தொகுதிகள் கோரியுள்ளதாக பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் தெரி வித்தார். இது முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே என்றும், மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முறை யும் உதயசூரியன் சின்னத் தில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த முறை மணப்பாறை மற்றும் பாபநாசம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை தேதி மாற்றம் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பிப்.23 ஆம் தேதி நடக்கவிருந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, பிப்.27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு  இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத் தில் காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு தலை வர் வேணுகோபால், முதல மைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இலங்கை காவலில் மீனவர்கள் விடுவிக்க ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி  இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத் தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த பிப்.22 ஆம் தேதி இரவு இலங் கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை யில், அவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 259 மீன்பிடிப் படகுகளும்  116 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர் என்று கடி தத்தில் தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தகைய தொடர்ச்சி யான கைது நடவடிக்கைகள் கடலோர சமூகத்தினரிடையே ஆழ்ந்த பதற்றத்தையும் வாழ்வாதார நிச்சயமற்ற தன்மையை யும் ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீண்டும் இவ்வாறு கைதாவதை தடுக்கவும், இலங்கை காவலில்  உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளை யும் விடுவிக்க உடனே தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிட கோரிக்கை

சென்னை: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த அறிவிப்புகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் கே.பழனிச்சாமி, பொதுச்  செயலாளர் பி.ராமமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில், “தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜன.24 ஆம் தேதி  சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்கள் நலன் சார்ந்து 4 அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை  மகிழ்வுடன் ஊழியர்களும், ஓய்வூதியர்களும் வரவேற்றனர். அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு மாதமாகியும் அதற்கான  அரசாணைகள் வெளியிடாதது கவலை அளிக்கிறது. அரசாணை  வெளியிடாததால் ஊழியர்களும், ஓய்வூதியர்களும் அதன் பலனை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, விரைந்து அர சாணை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.