தீக்கதிர் முக்கிய செய்திகள்
14 Dec 2025, 3:45 pm

தோழர் ஆர்.நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, டிச.14 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 100 வயதான நல்லகண்ணு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லகண்ணுவை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரை யீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதையடுத்து உடல் நிலையில் முன்னேற் றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நல்லகண்ணு கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி வீடு திரும்பினார். இதை யடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 16 ஆம் தேதி நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நல்லகண்ணு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘பாஜகவின் ஊதுகுழல் அன்புமணி’ அமைச்சர் கடும் விமர்சனம்

கடலூர், டிச.14 - கடலூர் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “காமராஜர் இலவச ஆரம்ப கல்வியைத் தொடங் கினார். அதன் பிறகு நமது கலைஞர் உயர்கல்வியை இலவசமாக்கினார். அதன் பிறகுதான் பின்தங்கிய சமூகத்தில் இருந்த மாணவர்கள் கல்வியில் முன் னேறத் தொடங்கினர்” என்று குறிப்பிட்டார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறி வித்தபோது எல்லோரும் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் அதை சாத்தியப்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின். தற்போது விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 1.30 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றார். இப்படி மகத்தான சாதனை படைத்த இந்த திட்டத்தை அன்புமணி குறை சொல்கிறார். அதிமுக, பாஜகவின் ஊதுகுழலாக அன்புமணி செயல்படுகிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

‘மத கலவரத்தை தூண்டுவோரை தமிழகம் விரட்டியடிக்கும்’

சென்னை: திருப்பரங்குன்றம் பிரச்சனையை யொட்டி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திருச்சியில் அளித்த பேட்டிக்கு திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். “உள்ளூர் மக்கள் எதிர்ப்பையும் மீறி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு மதக் கலவரத்தைத் தூண்டுவ தாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை குற்றம் சாட்டியுள் ளார். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ் மண்ணைக் கலவரப் பூமியாக மாற்ற எண்ணினால், பெரியார் மண்ணான தமிழ்நாடு அத்தகையவர்களை ஓட ஓட வி ரட்டியடிக்கும்” என்று வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ செவிலியர் மேம்பாட்டு சங்கம் விமர்சனம்

சென்னை, டிச.14 - மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 8,000 செவிலியர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரு கின்றனர். தமிழக அரசு இவர்களை பணி நிரந்தரம் செய்யும் என்று நம்பியிருந்த நிலையில், 167 செவிலி யர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்யும் வகையில், டிச.15 அன்று கலந்தாய்வு அறிவித்திருப்பது ஏமாற் றத்தை அளிக்கிறது. இது யானைப் பசிக்கு சோளப் பொரியை கொடுப்பது போன்று உள்ளது. தேர்தலுக்கு முன்பாக, எம்ஆர்பி தேர்வு எழுதி தேர்வான அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலா ளர் நே.சுபின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்தியாவில் அதிக குளிர்: உதகை முதலிடம்

சென்னை: தமிழகத்தில் மார்கழி மாதம் பிறப்பதற்கு முன்பே பனியின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. பிரபல வானிலை ஆர்வலர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தென்னிந்தியாவின் மிகவும் குளிர்ந்த மலைப்பிரதேசமாக உதகை முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கை 6.3 டிகிரி செல்சியஸுடன் பின்னுக்குத் தள்ளி, உதகை 5.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் தென்னிந்தியாவின் அதிக குளிர் பிரதேசமாக திகழ்கிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதி காலை 19.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த ஆண்டில் முதன்முறையாக சென்னையில் வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸுக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. நாகப்பட்டினம் 19.0 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலூர் 19.6 டிகிரி செல்சியஸ் ஆகிய வெப்பநிலைகளைப் பதிவு செய்துள்ளன. உள் மாவட்டங்களில் ஈரோடு மாவட்டத்தின் தாளவாடி 11.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் சமவெளிப் பகுதிகளில் அதிக குளிரைப் பதிவு செய்துள்ளது. மலைப்பிரதேசங்களில் கொடைக்கானல் 6.6 டிகிரி செல்சியஸ், மூணாறு 8.5 டிகிரி செல்சியஸ், குன்னூர் 8.8 டிகிரி செல்சியஸ் ஆகிய வெப்ப நிலைகளை பதிவு செய்துள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்ப தால், அதிகாலை நேரங்களில் பயணிப்பவர்கள் மற்றும் முதியவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

ஆளுநர் தேவையில்லை: அமைச்சர் தஞ்சாவூர்: திரு விடைமருதூரில் நடை

பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கோவி.செழியன், “ஆட்டுக்கு தாடி தேவை யில்லை. அதே போன்று தமிழ்நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை” என்று அண்ணா கூறி னார் என்பதை நினைவு படுத்திய அமைச்சர், தற்போது இருக்கக் கூடிய ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்பட்டு வரு கிறார் என்று குற்றம்சாட்டி னார். இதன் எதிரொலி யாகவே திமுக அரசு கொண்டு வரும் தீர்மா னங்களையும் கோரிக் கைகளையும் புறக் கணித்து வருகிறார் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் ரவி தேவையில்லை என்றும் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்

ஈரோட்டில் விஜய் கூட்டத்துக்கு அனுமதி ஈரோடு:

பெருந் துறை அருகே விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத் துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை இடத்தை பயன் படுத்திக் கொள்ள தவெக சார்பில் கட்ட ணம் செலுத்தப்பட்ட தால் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. தவெக சார்பில் நிலத்தை பயன் படுத்த டெபாசிட் மற்றும் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது. டிசம்பர் 18 ஆம் தேதி கூட்டம் நடைபெறு கிறது.