கோவையில் தோழர் ஆர்.வெங்கிடு நூற்றாண்டு துவக்க விழா
22 Sept 2026, 10:39 pm

கோவையில் தோழர் ஆர்.வெங்கிடு நூற்றாண்டு துவக்க விழா

கோயம்புத்தூர்,செப்.22-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ஆர். வெங்கிடு-வின் நூற்றாண்டு துவக்க விழா கோவையில் திங்களன்றுநடைபெற்றது.

கோவை மாவட்டத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியை வலுப்படுத்து வதில் முக்கியப் பங்காற்றிய தோழர் ஆர். வெங்கிடு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்நடைபெற்ற போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியவர். கோவை மாவட்ட பஞ்சாலை மற்றும்இன்ஜினியரிங் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக் காகவும் போராடியவர். மேலும், சின்னவேடம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றியதுடன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பின ராகவும் செயல்பட்டார்.அவரது நூற்றாண்டை ஓராண்டு காலம் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் கொண்டாடுவது என திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக திங்களன்று துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். கோபால் தலைமையில்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் எம்.கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். எஸ்.எஸ். குளம்மேற்கு ஒன்றியச் செயலாளர் எம். சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந் தம் சிறப்புரையாற்றினார்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி, மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மூத்த தலைவர்கள் என்.வி. தாமோதரன், மணி என்ற பி. நடராஜன், ஈரோடுமாவட்ட முன்னாள் செயலாளர்கள் துரைராஜ், பி. மாரிமுத்து, நீலகிரி மாவட்ட முன்னாள் செயலாளர் என். வாசு,சிஐடியு கோவை மாவட்டச்செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் மாமன்றக் குழுத் தலைவர் வி. இராமமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.எஸ். குளம் கிழக்கு இடைக்குழுச் செயலாளர் எஸ்.வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.