தோழர் ஆர்.சந்திரமோகன் நினைவுதினம் கடைபிடிப்பு
9 Apr 2026, 5:30 am

தோழர் ஆர்.சந்திரமோகன் நினைவுதினம் கடைபிடிப்பு

அருப்புக்கோட்டை, ஏப்.9- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் ஆர். சந்திரமோகன். அதைத் தொடர்ந்து மாவட்டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பின ராகவும், அருப்புக்கோட்டை வட்டாரச் செய லாளராகவும் பொறுப்பு வகித்தார்.

பின்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 100 நாள் வேலைக்குத் திட்டத் தொழிலா ளர்களைத் திரட்டி பல போராட்டங்களை நடத்தி யவர். அருப்புக்கோட்டை வட்டாரத்தில் நிகழ்ந்த தீண்டாமை பிரச்சனைகளுக்கு எதி ராக வலுவாகத் தலையீடு செய்து வெற்றி கண்டவர்.

இந்நிலையில், கொரோனா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2021 ஏப்.9 இல் உயிரிழந்தார். இந்நிலை யில், அவரது நினைவு தினம் அருப்புக் கோட்டையில் தோழர் பி.ராமமூர்த்தி நினை வகத்தில் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு நகர செயலாளர் பரம தயாளன் தலைமை வகித்தார்.