தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் நினைவேந்தல்
28 Oct 2026, 12:38 am

தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் நினைவேந்தல்

கோவை, அக்.27-சிஐடியு ஆட்டோ சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க ஸ்தாபக தலைவர்களில்ஒருவரான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் கணபதிபுதூர் கட்சி அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மூத்த தோழர் கே.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், வடக்கு நகரச் செயலாளர் எஸ்.நாராயணசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

இதேபோன்று சிஐடியு கோவை மாவட்டஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், சிஐடியு மாவட்டத் தலைவர்கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, ஆட்டோ தொழிலாளர் சங்கமாவட்டத் தலைவர் ஆர்.செல்வம், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.மாணிக்கவாசகம், மாவட்டப் பொருளாளர் மைக்கேல்சாமி மற்றும் திரளான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக, ஆர்.பாலகிருஷ்ணன் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.