தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முள்வேலியை வெட்டி, கள்ள மரக்காலை உடைத்தவர்

10 Oct 2026, 9:10 pm
முள்வேலியை வெட்டி,  கள்ள மரக்காலை உடைத்தவர்

முள்வேலியை வெட்டி, கள்ள மரக்காலை உடைத்தவர்

ஒன்றுபட்ட தஞ்சை மண்ணில் நெடுங்காடி ராமச்சந்திரன், ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்களால் விதைக்கப்பட்டு, பி.சீனிவாசராவால் வளர்க்கப்பட்ட செங்கொடி இயக்கம், இன்று தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என நான்கு மாவட்டங்களில் ஆலவிருட்சமாக நிற்கிறது. அது மலர்கள் தூவிய பாதையில் நடந்து வந்த இயக்கம் அல்ல; ரத்தம் சிந்திய களங்களில்முன்னேறிய இயக்கம். அந்தக் களங்களின் முன்வரிசையில் நின்றவர் தோழர் பி.எஸ்.டி.

சொந்த வாழ்விலும் சுயமரியாதை

சாதிச் சடங்குகளை எதிர்த்துப் பேசியதோடு நிற்கவில்லை அவர். புரோகிதர், தாலி, சாதியச் சடங்கு எதுவுமின்றிச் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்.வாழ்நாள் முழுவதும் எளிய உழவராகவே வாழ்ந்தார்.

களங்கள் பல, இலக்கு ஒன்று

ஆலத்தூர் உத்திரங்குடியில், பட்டியல் சமூக மக்களின் குடியிருப்பைச் சுற்றிய பொதுப்பாதைகளை நிலக்கிழார்கள் முள்வே

லியிட்டு அடைத்தனர். நேரில் சென்ற பி.எஸ்.டி. அந்த முள்வேலிகளை வெட்டி எறிந்து, பாதை உரிமையை நிலைநாட்டினார். பரமத்தூர், அம்மனூரில் குத்தகை விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்ற நிலப்பிரபுக்கள் முயன்றபோது, சாகுபடி நிலத்திலேயே இறங்கி நின்று அடியாட்களை எதிர்கொண்டு, விவசாயிகளின் உரிமையைக் காத்தார்.

1946இல் போருக்குப் பிந்தைய பஞ்சத்தில், நிலப்பிரபுக்கள் கொள்ளை லாபத்துக்காக நெல்லைப் பதுக்கினர். விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டிப் பாங்கல், களப்பால் பகுதிகளின் பதுக்கல் கிடங்குகளைமுற்றுகையிட்டு, நெல்லை வெளியே எடுத்துப்பசித்த மக்களுக்குச் சமமாகப் பங்கிட்டார்.1947இல் கோட்டூரில், கூலி அளக்கப் பெரிய அளவிலான கள்ள மரக்கால்களைப் பயன்படுத்தி ஏமாற்றிய களத்துமேடுகளைமுற்றுகையிட்டு, அந்த மரக்கால்களைப் பறிமுதல் செய்து உடைத்தார். அதன் பிறகு அரசு மரக்காலால் மட்டுமே கூலி அளக்கவேண்டும் என்ற நிலை உருவானது.

1950களில் தனியார் பேருந்துகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் பின்வரிசையிலோ நின்றுகொண்டோதான் பயணிக்க வேண்டும்என்ற எழுதப்படாத விதி இருந்தது. இளைஞர்களைத் திரட்டிப் பேருந்துகளில் ஏறி முன்வரிசையில் அமரவைத்து அந்தவிதியை உடைத்தார். கழனிவாசல் பகுதியில் பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்கும் தடையையும் மக்களைத் திரட்டித்தகர்த்தார்.

சிறைக்குள்ளும் ஒலித்த முழக்கம்

இந்தப் போராட்டங்களால் ஆத்திரமடைந்த நிலப்பிரபுக்களின் சூழ்ச்சியால் 1948 ஜூனில் கைது செய்யப்பட்டார். 1948–51இல் திருச்சி சிறையில், நல்ல குடிநீர்,புதுச்சட்டி, வேட்டி, மருத்துவ வசதி கேட்டுக் கைதிகளுக்காகப் போராடினார். அதிகாரிகள் அவரை நிர்வாணமாக்கி அடித்து, காயங்களில் மஞ்சள் பூசி அலறவைக்க முயன்றனர். அலறலுக்குப் பதிலாக அவரும் தோழர்களும் பாட்டாளி வர்க்க முழக்கங்களையே முழங்கினர். இறுதியில், அவர் ரத்தம் சிந்திய அந்தச் சிறையில் நல்ல குடிநீர் கிடைத்தது.அதிகாரப் பசியும் சுயநலமும் அரசியலாகிவரும் இன்றைய சூழலில், அவரதுதியாக வாழ்க்கையே இளைய தலைமுறைக்கான பாடம். பி.எஸ்.டி. விதைத்துச் சென்ற வர்க்கப் போராட்ட நெருப்பைத் தொடர்ந்து ஏந்திச் செல்வோம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.