தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலத்தை வென்றவர்கள் தத்துவ ஆசான் தோழர் பி ஆர் பி

16 Jul 2026, 9:35 pm
காலத்தை  வென்றவர்கள் தத்துவ ஆசான் தோழர் பி ஆர் பி
<p><strong>காலத்தை வென்றவர்கள் தத்துவ ஆசான் தோழர் பி ஆர் பி</strong></p><p>தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை யான வர்க்கக் கட்சிக்கு, அமைப்பு என்பது தான் மூளையும் முதுகெலும்புமாகும். முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து தன் நலன் காக்க உழைக்கும் வர்க்கம் பெற்றிருக்கும் ஒரே கருவி கட்சி அமைப்பு தான். கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை உருவாக்குவது, பாதுகாப்பது, பலப்படுத்துவது ஆகிய பணிகளில் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர் பி.ஆர். பரமேஸ்வரன் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். “கட்சியின் அடித்தளமான கிளைகளைப் பலப்படுத்து வதில் அல்லும் பகலும் பாடுபட்ட அவருக்கு, தத்துவ வரலாறு மற்றும் உலக தத்துவங்கள் குறித்து ஆழ்ந்த ஞானம் இருந்தது. கட்சிக்கு புதிதாக வருபவர்கள் தத்துவார்த்த நிலைபாடுகளைப் புரியாமல் விமர்சிக்கும் போது, அவர்கள் சோர்ந்து போகாவண்ணம் கண்ணியமாக வழிகாட்டுவார் தோழர் பி ஆர் பி” என்று மறைந்த தலைவர் மைதிலி சிவராமன் குறிப்பிடுகிறார். கட்சியின் எளிய உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர், கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு உயர் பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்டார். தமிழ் மொழியில் மார்க் சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழைக் கொண்டு வந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. 1967-75 காலகட்டத்தில் தோழர்கள் வி.பி. சிந்தனும், பி.ஆர்.பியும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு சென்னையில் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேற வழிவகுத்தனர். வி.பி.சி. தொழிற்கூடங்க ளுக்குள் ஊடுருவிப் பரந்துபட்ட தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கியபோது, அவருக்கு உற்றதுணையாக நின்று, எழுச்சிமிக்க அந்தத் தொழிலாளர்களிலிருந்து முக்கிய ஊழியர்களைக் கட்சிக்கு ஈர்த்து, கட்சி அமைப்பைக் கட்டியதில் பி.ஆர்.பியின் பங்கு மிகப் பெரியது. அவரது நினைவுநாளில் வர்க்க அமைப்பைப் பலப்படுத்தும் பணியைத் தொடர்வோம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.